கே. பத்மநாபையா
கே. பத்மநாபையா (K. Padmanabhaiah) (பிறப்பு:1938) இவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி ஊழியர் மற்றும் இந்தியாவின் முன்னாள் உள்துறை செயலாளர் ஆவார்[1]. இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ஆளுநர்கள் நீதிமன்றத்தின் தலைவராக இவர் உள்ளார்[2]. இவை தவிர காவல் சீர்திருத்தங்களுக்கான குழு (2000), இராணுவ அதிகாரிகள் தேர்வு வாரிய மறு ஒழுங்கமைப்புக் குழு, தேசிய நகர்ப்புற மேலாண்மை நிறுவனப் பணிகள் மதிப்பாய்வுக் குழு போன்ற பலகுழுக்களுக்கு தலைவராக இருந்தார் [3]. இந்திய ஆட்சிப் பணியில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு குடிமக்களின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[4].
கே. பத்மநாபையா K. Padmanabhaiah | |
---|---|
பிறப்பு | 6 அக்டோபர் 1938 கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | குடிமைப்பணி |
அறியப்படுவது | இந்திய ஆட்சிப் பணி |
விருதுகள் | பத்ம பூசண் விருது சையண்ட் பன்னாட்டு விருது, இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது சிரோமணி விருது |
வலைத்தளம் | |
Website |
சுயசரிதை
தொகுகே. பத்மநாபையா 1938 அக்டோபர் 6 ஆம் தேதி இந்திய மாநிலமான ஆந்திராவில் கிருட்டிணா மாவட்டத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்தார்.[5] ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுகலை பட்டமும், ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை ஆய்வுகள் நிறுவனத்தில் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்ற பிறகு, 1961 இல் மகாராட்டிர ஒதுக்கீட்டில் இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தார். 1970 ஆம் ஆண்டில் மகாராட்டிராவில் சர்க்கரை கூட்டுறவு இயக்குநராக நியமிக்கப்பட்டபோது இவரது முதல் பெரிய பதவி வந்தது. நான்கு ஆண்டுகள் இவர் அந்த பதவியில் நீடித்தார். இவரது பணிக்காலத்தில் சர்க்கரைத் தொழில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.[6] 1975 ஆம் ஆண்டில், இவர் மாவட்ட ஆட்சியராக நாசிக் நகருக்கு மாற்றப்பட்டார். இந்த சமயம் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இவரது தலைமையில், அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் 20 அம்ச பொருளாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 1984 ஆம் ஆண்டில் மின் அமைச்சகத்திற்கு சென்றார். அங்கு இவர் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அடுத்த நடவடிக்கை லண்டனாக இருந்தது. ஐக்கிய இராச்சியத்தின் இந்திய தூதரகத்தில் பொருளாதார அமைச்சராக மூன்று வருட காலத்திற்கு பணியாற்றினார். பின்னர், இந்தியாவுக்குத் திரும்பிய இவர் 1990-91 காலகட்டத்தில் கிரேட்டர் மும்பை நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1993 இல் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார். அடுத்த ஆண்டு, பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அரசாங்க செயலாளர் பதவியை இவர் ஏற்றுக்கொண்டார், ஒரே நேரத்தில் இந்தியாவின் இரண்டு தேசிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களின் செயலாளராக கூடுதல் பொறுப்போடு , உள்துறை அமைச்சகத்தின் மத்திய செயலாளராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 1996 இல் தனது சட்டரீதியான மேலதிக பதவிகளைத் தாண்டி பதவிகளை வகித்தார். 1997 வரை நீட்டிப்பு பெற்றார்.[7]
2011 இல், ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக சிறீசைதன்யா கல்வி நிறுவனம் என்ற அகாதமியை நிறுவியபோது, பத்மநாபைய்யா இந்த நிறுவனத்தின் தைலவராக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுக்கு உதவினார். நான்கு வருட சேவைக்குப் பின்னர், எஸ். எம். தத்தாவுக்குப் பின், நிறுவனத்தின் ஆளுநர்கள் நீதிமன்றத்தின் தலைவராக, இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரிக்கு (ஏ.எஸ்.சி.ஐ) சென்றார். இன்றுவரை அந்தப் பதவியை வகிக்கிறார்.[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Padmanabhaiah assumes charge as Chairman of ASCI". Economic Times. 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
- ↑ "Governance". Administrative Staff College of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
- ↑ 3.0 3.1 "Padmanabhaiah assumes charges as Chairman of ASCI - Business Line". The Hindu - Business Line. 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Padmanabhaiah on IAFA". Indo-American Friendship Association. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
- ↑ "Profile on ASCI". Administrative Staff College of India. 2016. Archived from the original on 11 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Indian ad hoc service". India Today. 31 January 1997. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
மேலும் காண்க
தொகு- George Iype (16 September 1997). "Tata Tea controversy: We are not going to leave anybody scot-free says Mahanta". ReDiff. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- "Make cash transfer scheme conditional, says Padmanabhaiah". The Hindu. 24 December 2012. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
- "India in Crisis : How do we save our Nation". K. Padmanabhaiah on யூடியூப் video. Social Cause. 3 September 2012. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.