சை. மு. உ. பர்னி
சையத் முசாபர் உசைன் பர்னி (S. M. H. Burney) 14 ஆகஸ்ட் 1924 - 7 பிப்ரவரி 2014)[1] என்பவர் ஓர் அரசு ஊழியர், திரிபுரா, நாகாலாந்து, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ஆவார்.
பர்னி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி கல்லூரியின் முன்னாள் மாணவர்.[2] இவர் ஒரிசா தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் இம்மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[3] 1981 மற்றும் 1984க்கு இடையில், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆளுநராகவும், 1987 முதல் 1988 வரை இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானா ஆளுநராகவும் பணியாற்றினார்.[4] இவர் 1988 முதல் 1992 வரை நான்காவது மற்றும் ஐந்தாவது சிறுபான்மை ஆணையங்களின் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் இருந்தார்.[5] மேலும் 1990 முதல் 1995 வரை தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தார்..
இக்பால்: கவிஞர் - இந்தியாவின் தேசபக்தர் என்ற புத்தகத்தினை பர்னி எழுதியுள்ளார். [6] [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hindustan Year-book and Who's who. Calcutta: MC Sarkar. 1988. p. 29.
- ↑ "BAREILLY COLLEGE, BAREILLY – Alumni". Archived from the original on 19 February 2012.
- ↑ "CHIEF SECRETARIES OF ODISHA FROM 1936" (PDF).
- ↑ "States after 1947 M-W".
- ↑ "National Commission for Minorities". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
- ↑ "States after 1947 M-W".
- ↑ Notes On The Great Indian Circus.