கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஆறாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி பகுதியில் அமைந்துள்ளது. [1] இது ஒரு மாடக்கோயில் ஆகும்.[2]
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பேர் நகர் |
பெயர்: | கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கோவிலடி |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அப்பக்குடத்தான் |
தாயார்: | இந்திரா தேவி, கமல வள்ளி, |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் |
வரலாறு | |
அமைத்தவர்: | கரிகால் சோழன் |
தல வரலாறு
தொகுஇக்கோவில் சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். பஞ்சரங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார். [3]
மூலவர்
தொகுஇத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தாயார்
தொகுஇக்கோயிலில் உள்ள தாயார் கமலவள்ளி என்றழைக்கப்படுகிறார்.
மங்களாசாசனம்
தொகுஇத்தலம் நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். [4]
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு 29 ஜனவரி 2016இல் நடைபெற்றது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ அப்பால ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில்
- ↑ "புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்". Hindu Tamil Thisai. 2024-11-03. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
- ↑ அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்
- ↑ திருப்பேர்நகர் அப்பால ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில்
- ↑ கோவிலடி கோயிலில் குடமுழுக்கு விழா, தினமணி, 30 ஜனவரி 2016