கோஹாட் மாவட்டம்

கோஹாட் மாவட்டம் (Kohat District) (பஷ்தூ: کوهاټ ولسوالۍ , உருது: ضلع کوہاٹ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கோஹாட் நகரம் ஆகும். கோஹாட் நகரம், பெசாவர் நகரத்திற்கு தெற்கே 71 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கோஹாட் மாவட்டம்
ضلع کوہاٹ
மாவட்டம்
மேல்:துராணி இளவரசனின் நினைவிடம், கோஹாட் நகரம்
அடியில்: தண்டா அணை
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கோஹாட் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கோஹாட் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்கோஹாட்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்2,991 km2 (1,155 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்11,11,266
 • அடர்த்தி370/km2 (960/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுகாக்கள்2
இணையதளம்kohat.kp.gov.pk

மக்கள் தொகை பரம்பல் தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோஹாட் மாவட்டத்தின் மக்கள் தொகை 11,11,266 ஆகும். அதில் 555,765 ஆண்கள் மற்றும் பெண்கள் 5,55,390 ஆக உள்ளனர். 75.71% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 58.59% ஆகும்.[1]மக்களில் 83.85% பஷ்தூ மொழியும், 12.87% இண்டிக்கோ மொழியும், 1.24% உருது மற்றும் 1.19% பஞ்சாபி மொழியும் பேசுகின்றனர்.

சமயம் தொகு

சமயம் மக்கள் தொகை (1941)[2]:22 % (1941) மக்கள் தொகை (2017)[1] % (2017)
இசுலாம்   266,224 91.99% 1,106,709 99.59%
இந்து சமயம்   17,527 6.06% 1,004 0.09%
சீக்கியம்   4,349 1.5% --- ---
கிறித்தவம்   1,304 0.45% 3,190 0.29%
மொத்த மக்கள் தொகை 289,404 100% 1,111,266 100%

மாவட்ட நிர்வாகம் தொகு

கோஹாட் மாவட்டம் கோஹாட் மற்றும் லட்சி என இரண்டு தாலுகாக்களை கொண்டது.

மாகாணச் சட்ட்மன்றத் தொகுதிகள் தொகு

இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. "CENSUS OF INDIA, 1941 VOLUME X NORTH-WEST FRONTIER PROVINCE". பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.

உசாத்துணை தொகு

  • 1981 District Census report of Kohat. District Census Report. Vol. 27. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983.
  • 1998 District Census report of Kohat. Census publication. Vol. 42. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
  • Christopher Shackle (1980). "Hindko in Kohat and Peshawar". Bulletin of the School of Oriental and African Studies 43 (3): 482–510. doi:10.1017/S0041977X00137401. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-977X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஹாட்_மாவட்டம்&oldid=3610405" இலிருந்து மீள்விக்கப்பட்டது