கோ. கிருட்டிணையா
கோ. கிருட்டிணையா (G. Krishnaiah) இந்திய நாட்டின் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாநிலத்தினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். சில அரசியல்வாதிகள் தலைமையிலான கும்பலால் கொல்லப்பட்ட 1985 ஆம் ஆண்டு பிரிவின் இந்திய நிர்வாக சேவை (இ.ஆ.ப) அதிகாரி ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 08 ஆம் தேதியன்று பிறந்தார். 1994 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 05 ஆம் தேதியன்று இறக்கும்போது வயது 37 ஆகும். அப்போதைய பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதி (டி.எம்.) ஆக பணியாற்றினார்.
கோ.கிருட்டிணய்யர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 08-பிப்ரவரி-1957 பின்னர் ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 5 திசம்பர் 1994 முசாபர்பூர், பீகார் | (அகவை 37)
துணைவர் | உமா தேவி [1] |
பிள்ளைகள் | 2 |
வேலை | அதிகாரத்துவவாதி |
இவரது சேவையின் நினைவாக, பாக்கெட்டில் பேனாவுடன் இவரது சிலை கோபால்கஞ்ச் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மரணம்
தொகு2007 ஆம் ஆண்டில் பாட்னா மாவட்ட நீதிமன்றம் ஆறு அரசியல்வாதிகளை இவரது கொலைக்கு குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளில் ஆனந்த் மோகன் சிங் மற்றும் அவரது மனைவி லவ்லி ஆனந்த் (இருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்), விஜய் குமார் சுக்லா ("முன்னா சுக்லா" என்று அழைக்கப்படுகிறார்) , சட்டமன்ற உறுப்பினர் அக்லாக் அகமது மற்றும் அருண் குமார், அரேந்திர குமார் (மூத்த சேடியூ தலைவர்) மற்றும் எசு.எசு. தாக்கூர் ஆவர்.[2] கிருட்டிணையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆனந்த் மோகன் பீகார் அரசின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.[1]