கோ. வா. உலோகநாதன்

கோபிச்செட்டிப்பாளையம் வாசுதேவன் லோகநாதன் (Gobichettipalayam Vasudevan G. V. Loganathan, ஏப்ரல் 8, 1954 – ஏப்ரல் 16, 2007)[1] இந்தியாவில்-பிறந்த அமெரிக்கப் பேராசிரியர் ஆவார். அமெரிக்க வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் அங்கமாயிருந்த குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். வர்ஜீனியா டெக்கில் ஏப்ரல் 16, 2007இல் 32 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிப் படுகொலை நிகழ்வில் உயிரிழந்தவர்களில் இவரும் ஒருவர்.

கோ.வா. லோகநாதன்
125 × 163 pixels
பேரா. ஜி.வி. லோகநாதன்
பிறப்புகோபிச்செட்டிப்பாளையம் வாசுதேவன் லோகநாதன்
ஏப்ரல் 8, 1954(1954-04-08)
கரட்டடிபாளையம், கோபிச்செட்டிப்பாளையம்,
சென்னை மாநிலம் (தற்போதைய தமிழ்நாடு), இந்தியா
இறப்புஏப்ரல் 16, 2007(2007-04-16) (அகவை 53)
பிளாக்சுபெர்கு, வர்ஜீனியா,
அமெரிக்க ஐக்கிய நாடு
வாழிடம்வர்ஜீனியா
குடியுரிமைஇந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்இந்தியர்
துறைகுடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்
பணியிடங்கள்வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பொறியியல் இளங்கலை, பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி (சென்னைப் பல்கலைக்கழகம்), 1976
தொழினுட்ப முதுகலை, இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், 1978
முனைவர் பட்டம், பர்டியூ பல்கலைக்கழகம், 1982
அறியப்படுவதுநீரியல், நீர் வள அமைப்புகள், நீரழுத்த வலைப்பின்னல்
விருதுகள்வெஸ்லி டபுள்யூ. ஹோர்னர் விருது (1996)

வாழ்க்கை வரலாறு தொகு

லோகநாதன் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள கரட்டடிப்பாளையத்தைச் சேர்ந்தவர். தமது இளங்கலைப் பொறியியல் படிப்பை கோயம்புத்தூரிலுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் 1976யில் முடித்தார். பின்னர் கான்பூரிலுள்ள இந்தியத் தொழினுட்பக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக ஐக்கிய அமெரிக்கா சென்ற லோகநாதன் அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் முனைவர் ஜாக் டெல்லூர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார்.[2] முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நடுத்தர நகரங்களில் நீர்நிலை இடைமுகங்களுக்கான பன்னோக்கு திட்டமிடுதலைக் குறித்ததாக இருந்தது.[3]

லோகநாதன் வர்ஜீனிய டெக்கில் திசம்பர் 16, 1981 [1] அன்று தமது முதல் வேலையில் அமர்ந்தார். குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் வகுப்புகளை 2007-இல் தமது இறப்புவரை நடத்தி வந்தார். அவரது முனைவுகள் நீரியல் மற்றும் நீரழுத்த வலைப்பின்னல்களை குறித்தாயிருந்தது. அவர் கூட்டாக மற்றவர்களுடன் எழுதிய நூல்களும் வெளியீடுகளும் நகராட்சி நீர்வழங்கு பரவல் பிணைப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.[2] வர்ஜீனியா டெக் பல்கலையில் மிகச்சிறந்த ஆசிரியர் விருது, கற்பித்தலில் சீர்மைக்கான முதல்வர் விருது, குடிசார் பொறியியல் கல்வியில் சிறந்த ஆசிரிய மக்கள் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[4][5] வர்ஜீனிய டெக் செனட்டில் உறுப்பினராகவும் வர்ஜீனியா டெக் பெருமை அறமன்றத்தில் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.[6]

அமெரிக்க குடிசார் பொறியியலாளர்களின் சமூகத்தில் செயற்பாடுள்ள உறுப்பினராகத் திகழ்ந்தார். நீரியல் துறை வல்லுநராக நீர்வளப் பொறியியல் இதழுக்கு துணை ஆசிரியராக இருந்தார். பல்கலைக்கழகத்திலும் வளாகத்திலேயே அமைந்திருந்த தேசிய வானிலை சேவை அலுவலகத்துடனான ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.[7][8]

வர்ஜீனியா டெக் வளாகத்திற்கருகேயே லோகநாதன் தமது மனைவி உஷா, இரு மகள்கள், உமா, அபிராமியுடன் வாழ்ந்து வந்தார்.[9]

மேற்சான்றுகள் தொகு

  1. "Dr. Loganathan's visitation and eulogy service pamphlet". http://filebox.vt.edu/a/asuhadi/loganathan/. பார்த்த நாள்: 2007-04-21. 
  2. 2.0 2.1 "ASCE Condolence Book for G.V. Loganathan". http://live.asce.org/blog/1/virginia/GV%20Loganathan/. பார்த்த நாள்: 2007-04-21. 
  3. "The victims: Among the dead were 2 professors who had done postgraduate work at Purdue University". IndyStar. 2007-04-18. http://www.indystar.com/apps/pbcs.dll/article?AID=/20070418/NATIONWORLD/704180455/1012/NATIONWORLD. 
  4. "G.V. Loganathan wins Wine Award for Excellence in Teaching". Virginia Tech Civil Engineering Department. 2006-05-08 இம் மூலத்தில் இருந்து 2012-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120207150815/http://www.cee.vt.edu/index.php?module=10&item=1&id=1&do=view&news=22. 
  5. "Academy of Teaching Excellence W.E. Wine Award Recipients". http://www.ate.ceut.vt.edu/WINE.htm. பார்த்த நாள்: 2007-04-21. 
  6. "Profiles of the victims". WCNC.com. 2007-04-18 இம் மூலத்தில் இருந்து 2007-05-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070520234106/http://www.wcnc.com/news/topstories/stories/wcnc-041707-victims.1b119feb.html. 
  7. "ASCE Condolence Book for the Virginia Tech". http://live.asce.org/blog/1/virginia/. பார்த்த நாள்: 2007-04-21. 
  8. "EWRI Expresses its Sympathies" இம் மூலத்தில் இருந்து 2007-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070515052326/http://www.ewrinstitute.org/vt.cfm. பார்த்த நாள்: 2007-04-20. 
  9. "Loganathan's family flying in for last rites". Hindustan Times. 2007-04-18 இம் மூலத்தில் இருந்து 2008-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080219020747/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=16003ce0-3d69-49af-9722-387fb08965d2&. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._வா._உலோகநாதன்&oldid=3575175" இருந்து மீள்விக்கப்பட்டது