கௌசல்யா சங்கர்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ உடுமலை சங்கர் கொலை வழக்கு உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
கௌசல்யா சங்கர் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்[சான்று தேவை] மற்றும் உடுமலை சங்கர் கொலை வழக்கு மூலம் அறியப்பட்டவர் ஆவார். உடுமலையைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான சங்கரை பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகளான இவர் காதல் திருமணம் செய்தார். கவுசல்யாவின் பெற்றோர், சங்கரை 2016 மார்ச் 13 ஆம் நாள் ஆணவக் கொலை செய்தனர். கொலைக்குக் காரணமான கவுசல்யாவின் பெற்றோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.[1][2][3][4][5][6][7][8]
சங்கரின் மரணத்திற்குப் பின்னர் சங்கர் குடும்பத்தினருடன் வசித்து வந்த கௌசல்யா சாதி ஒழிப்புச் செயற்பாட்டாளாராக அறியப்பட்டார்.[9] கௌசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியமும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்குச் சத்துணவுத் துறையில் வேலையும் தமிழக அரசு வழங்கியது.[10] மார்ச் 13 2018 இல் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை என்ற பெயரில் தனிப்பயிற்சி மையத்தை கௌசல்யா தொடங்கினார்.[11]
மறுமணம்
தொகுகொளத்தூர் மணி, தியாகு மற்றும் எவிடன்ஸ் கதிர் தலைமையில் 2018 டிசம்பர் 9 ஆம் நாள் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தில் சக்தி என்பவரைக் கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்.[12][13] இத்திருமணத்திற்குப்பின் சக்தி மீது சில பாலியல் புகார்கள் வந்ததன் அடிப்படையில், கொளத்தூர் மணி மற்றும் தியாகுவால் விசாரிக்கப்பட்டு, சக்திக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கௌசல்யாவும் சக்தியின் தவறுக்கு வருத்தம் தெரிவித்து தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு; நீதியை நிலைநாட்டிய கோர்ட்". தினகரன். Archived from the original on 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Honour' killing of Dalit youth Shankar in Tamil Nadu: death for six, including father-in-law". R. Vimal Kumar. The Hindu. 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "From victim to crusader: the story of Kausalya Shankar". P. V. Srividya. The Hindu. 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "India at 70 'I'm not afraid': Husband murdered, Kausalya fights honour killings". Dhrubo Jyoti. Hindustan Times. 13 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "India's Forbidden Love: An Honour Killing on Trial". Al Jazeera. 11 March 2018. Archived from the original on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "Kausalya Shankar: Standing tall". Frontline. 27 April 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "India woman fights family over 'low caste' husband's murder". பிபிசி. 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "Six men sentenced to death in India for Dalit 'honour' killing". Sandhya Ravishankar. தி கார்டியன். 15 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "Chronicling wife of murdered Dalit youth, Kausalya Sankar's path to activism". Sujatha S. New Indian Express. 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "'போராடாமல் இங்கு எதுவும் கிடைத்துவிடாது!' - கலங்கும் கவுசல்யா". விகடன். பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காதல் திருமணம் செய்தவர்களுக்காக போராடுவேன் - உடுமலை சங்கர் மனைவி பேச்சு". மாலைமலர். https://www.maalaimalar.com/News/District/2018/03/14095155/1150800/udumalpet-shankar-wife-says-I-will-fight-for-love.vpf. பார்த்த நாள்: 1 January 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார்; கவுசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம்: தியாகு, கொளத்தூர் மணி நடத்திய விசாரணையில் முடிவு". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/article25875739.ece. பார்த்த நாள்: 1 January 2019.
- ↑ "கெளசல்யா - சக்தி... தொடரும் திருமண சர்ச்சை... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏது நீதி?!". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jan/04/kousalya-sakthi-wedding-issues-3070963.html. பார்த்த நாள்: 5 January 2019.
- ↑ "Kangaroo court’s instant justice singes Parai artiste Sakthi". newindianexpress.com இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190106043412/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jan/01/kangaroo-courts-instant-justice-singes-sakthi-1918913.html. பார்த்த நாள்: 5 January 2019.