கௌதம புத்தா வனவிலங்கு காப்பகம்
கௌதம புத்தா காட்டுவிலங்கு காப்பகம் (Gautam Budha Wildlife Sanctuary-கௌதம புத்தர் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்திலும், கிழக்கு-மத்திய இந்தியா சார்க்கண்டு மாநிலத்தின் கோடர்மா மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு வனவிலங்குக் காப்பகம் ஆகும்.
கௌதம் புத்தா வனவிலங்கு காப்பகம் | |
---|---|
அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 24°32′N 85°34′E / 24.54°N 85.56°E |
பரப்பளவு | 259 km2 |
நிறுவப்பட்டது | 1976 |
இந்தக் காப்பகம் 1976ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது 259 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. வனவிலங்கு புகலிடமாக மாறுவதற்கு முன்பு, இப்பகுதி ஒரு தனியார் வேட்டை காப்பகமாக இருந்தது.[1][2]
கீழ் கங்கை சமவெளியின் ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் சோட்டா நாக்பூர் உலர்ந்த இலையுதிர்கால காடுகளின் சுற்றுச்சூழல் பகுதிகளை இந்த காப்பகம் உள்ளடக்கியது. தாவர சமூகங்களில் வறண்ட மற்றும் ஈரமான சால் (சோரியா ரோபசுடா) காடுகள், பள்ளத்தாக்கு முள் காடு மற்றும் வெப்பமண்டல வறண்ட ஆற்றுக் காடுகள் அடங்கும்.[3]
புலி, சிறுத்தை, ஓநாய், தேன் கரடி, புள்ளிமான், இந்தியச் சிறுமான் மற்றும் பல வகையான பறவைகள் இங்குக் காணப்படும் விலங்கினங்களில் அடங்கும்.
சரணாலயத்தில் ஓர் ஓய்வு இல்லம் உள்ளது. இந்த காப்பகம் கயா நகருக்குத் தென்கிழக்கே 65 கி. மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தொடருந்து நிலையமும் வானூர்தி நிலையமும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Negi, Sharad Singh (2002). Handbook of National Parks, Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing. pp. 94
- ↑ Rongmei, Precious (2024-01-17). "Best Wildlife Experiences in Bihar for the Winter Season.". Times of India.. https://timesofindia.indiatimes.com/travel/destinations/best-wildlife-experiences-in-bihar-for-the-winter-season/photostory/106921971.cms.
- ↑ Negi, Sharad Singh (2002). Handbook of National Parks, Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing. pp. 94