கௌரி பர்வதம்
கௌரி பர்வதம் அல்லது கோரி பர்வதம் என்பது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இம்மலையிலுள்ள சிகரத்தின் உயரம் 6,708 மீட்டர் (22,008 அடி) ஆகும்.[2] இருபதாயிரம் அடிகளுக்கும் மேல் உயர்ந்திருந்ததால் இருபதாம் நூற்றாண்டில் மலையேற்றக் குழுவினரிடையே இது ஒரு புகழ்பெற்ற இடமாக இருந்ததது.[3] ஹாத்தி பர்பத், நீலகிரி பர்பத் மற்றும் காமட் மலைத் தொடர்கள் போன்றவை பூக்கள் பள்ளத்தாக்கில் கௌரி பர்வதத்துடன் உயர்ந்திருக்கும் மற்ற மலைகள் ஆகும்.
கௌரி பர்வதம் | |
---|---|
கோரி பர்வதம் | |
குர்சோன் புக்யாலிலிருந்து கௌரி பர்வதம் இடதுபுறம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,708 m (22,008 அடி) |
புடைப்பு | 353 m (1,158 அடி)[1] |
ஆள்கூறு | 30°42′40″N 79°42′03″E / 30.71111°N 79.70083°E |
புவியியல் | |
அமைவிடம் | உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | கார்வால் இமாலயம் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1939 ஆகஸ்ட் 18 ஆம் நாள் ஆன்ட்ரே ரோச், ஃபிரிட்ஸ் ஸ்டொய்ரி மற்றும் டேவிட் ஸோக் மற்றும் சில ஷெர்ப்பாக்கள் |
முதல் மலை ஏற்றம்
தொகுகௌரி பர்வத சிகரத்தில் முதல் மலை ஏற்றம் 1939 ஆகஸ்ட் 18 ஆம் நாள் ஆன்ட்ரே ரோச், ஃபிரிட்ஸ் ஸ்டொய்ரி மற்றும் டேவிட் ஸோக் மற்றும் சில ஷெர்ப்பாக்களால் நிகழ்த்தப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ "Gauri Parbat". PeakVisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ ROCH, ANDRE. "DUNAGIRI, GAURI PARBAT, RATABAN, AND CHAUKHAMBA, 1939". The Himalayan Club/Himalayan Journal 12. Archived from the original on 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Himalayan journal Vol 35. Oxford: Oxford University Press. 1979. p. 23.