கௌரி மௌலேகி

கௌரி மௌலேகி(Gauri Maulekhi)

கௌரி மௌலேகி
2017இல் நாரி சக்தி விருது பெற்ற கௌரி மௌலேகி
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுவிலங்கு நல ஆர்வலர்
இந்தியாவில் வசிக்கும் ஓர் விலங்கு நல ஆர்வலர் ஆவார்.   இவர் விலங்குகளுக்கான மக்கள் அறங்காவலராக செயல்படுகிறார்.  இந்த அமைப்பு,  மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ரீமதி  மேனகா காந்தி,  நிறுவிய இந்தியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பாகும். திருமதி மேனகா காந்தியின் பாதுகாவலரான இவர், கால்நடைகளை பலியிடும் நடைமுறைக்கு எதிரான பிரச்சாரம் உட்பட விலங்கு உரிமைகளுக்கான வெற்றிகரமான பிரச்சாரங்களை வழிநடத்தியுள்ளார்.    [1]  [2]  [3] [4]

பின்னணி தொகு

கௌரி மௌலேகி, 1995 ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள விலங்குகளுக்கான மக்கள் நிறுவனத்தில் அறங்காவலராக, (பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்) தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார், அங்கு இவர் நகரத்தில் முதல் விலங்குகள் தங்குமிடத்தை அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். இவர் தங்குமிடத்திற்கு நிதி திரட்ட உதவினார், கைவிடப்பட்ட நாய்களை மறுவாழ்வு செய்வதற்கான தத்தெடுப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். மேலும், துன்பத்தில் உள்ள விலங்குகளுக்கான விலங்கு மருத்துவ ஊர்தி சேவையை ஒருங்கிணைக்க உதவினார். 2004 முதல் 2008 வரை, நொய்டாவில் உள்ள விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி, அமைப்பின் தங்குமிட முயற்சிகளுக்குப் பங்களித்தார். 2008 ஆம் ஆண்டில், டெஹ்ராடூனில் உள்ள விலங்குகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனமான ராஹத் உடன் அவர் தன்னார்வத் தொண்டு செய்தார். இந்த காலகட்டத்தில், இவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2012 ஆம் ஆண்டில், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் - பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் உத்தரகாண்ட் என்ற உத்தரகாண்ட் அத்தியாயத்தை அவர் நிறுவினார். [5] [6]

மௌலேகி சர்வதேச அளவில் செயல்படுகிறார். இவர், நேபாளத்தில் காதிமாய் திருவிழாவில் நடந்த மாபெரும் மத விலங்கு படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வற்புறுத்தினார். கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் பருவநிலை பேரழிவு ஏற்பட்டது, அப்போது வட இந்திய வெள்ளம் அசாதாரண மழையால் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் பகுதியில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட விலங்குகளை வெளியேற்ற மௌலேகி உதவினார். இந்த விலங்குகளை காப்பாற்றுவது பேரழிவுகளை கையாள்வதற்கான எதிர்கால தேசிய கொள்கையை பாதித்தது. திட்டங்களில் இப்போது விலங்குகள் நலன் கருதி இணைக்கப்பட்டுள்ளது. சோனேபூர் விலங்குகள் கண்காட்சியில் (சட்டவிரோத) வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரச்சாரத்திற்கும் மௌலேகி உதவினார். இந்த செயல்களினால் மௌலேகிக்கு நாரி சக்தி விருது (தேசிய விருது) கிடைத்தது. [7]

2019 ஆம் ஆண்டில், விலங்குகளின் நலனை மேம்படுத்துவதற்கான தனது கடந்தகால கடமைகளை அரசாங்கம் உணர வைக்கும் பிரச்சாரத்தை மௌலேகி தொடங்கினார். மாநில விலங்குகள் நல வாரியங்களை அமைப்பதற்கான பத்து ஆண்டு கால உத்தரவு குறித்து இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவர் கடிதம் எழுதினார். இந்த வாரியங்கள் உச்ச நீதிமன்றத்தால் கோரப்பட்டன; சில உருவாக்கப்பட்டன, மற்றவை பணியாளர்கள் அல்லது வரவு செலவுத் திட்டம் இல்லாததால், பெயரளவில் மட்டுமே இருந்தன. 2020 ஆம் ஆண்டில், மாநில விலங்குகள் நல வாரியங்களை உருவாக்க மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மௌலேகி இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். [8]

விருதுகளும் கௌரவங்களும் தொகு

  • 2013: உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது விலங்கு பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் சிறப்பான சேவை செய்ததற்காக உத்தரகாண்ட் அரசாங்கத்தால் பாராட்டப்பட்டது
  • 2017: ஆய்வகங்களில் விலங்குகளின் தேவையற்ற பயன்பாட்டைக் குறைப்பதற்கான பங்களிப்புக்கான லஷ் பரிசு
  • மார்ச்8, 2018: நாரி சக்தி விருது, இந்தியாவில் பெண்களுக்கான உயரிய சிவிலியன் விருது. [9]
  • 2018: விலங்கு நலனில் சிறந்த பணிக்காக லக்னோ பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது
  • 2018: அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் உள்ள ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் வழங்கும் சிறந்த விலங்கு பாதுகாப்பு விருது

மேற்கோள்கள் தொகு

  1. "Gauri Maulekhi, Author at Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
  2. "Animal Law Training Program" (PDF). hsi.org.
  3. Mishra, Sonali (June 23, 2022). "Uttarakhand HC asks state to list measures to protect equines on pilgrimage routes". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  4. "Rights activist sends legal notice to Hansraj College over cow centre". The Times of India (in ஆங்கிலம்). February 10, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  5. "Welfare of animals her priority". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  6. "People for Animals unit to move court over threat". https://www.deccanchronicle.com/nation/current-affairs/160218/people-for-animals-unit-to-move-court-over-threat.html. 
  7. "Ministry of Women and Child Development Nari Shakti Awardees 2017" (PDF). Ministry of Women and Child Development. 8 March 2017. Archived from the original (PDF) on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
  8. "Who's looking after the animals of India?". Mongabay-India (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  9. "Infographic: Nari Shakti Puraskar - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_மௌலேகி&oldid=3911916" இலிருந்து மீள்விக்கப்பட்டது