க்ரியா பதிப்பகம்
க்ரியா பதிப்பகம் தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயற்படும் ஒரு பதிப்பகம். எஸ். ராமகிருஷ்ணனும், ஜெயலட்சுமியும் இதை 1974ல் நிறுவினர்.[1] இதுவரை (யூன் 2015) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவற்றுள் பல துறைகளையும் சார்ந்த தமிழ் நூல்களும், ஆங்கில மொழி நூல்களும் அடங்கும். இவற்றுள் இந்திய மொழிகளில் இருந்தும் வெளிநாட்டு மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் உள்ளன. தற்காலத் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களை மட்டுமன்றி, பழந்தமிழ் இலக்கியம், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழினுட்பம் போன்ற துறைகள் சார்ந்த நூல்களையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[2] க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, இப்பதிப்பகத்தின் முக்கிய வெளியீடுகளுள் ஒன்று. 1985ல் தொடங்கப்பட்ட அகராதிப் பதிப்பு வேலைகள் நிறைவடைந்து அதன் முதற்பதிப்பு 1992ல் வெளியானது. அவ்வகராதியின் விரிவாக்கிய பதிப்பு 2008ல் வெளியிடப்பட்டது.
வெளியீடுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பதிப்பகம், 2014, பக். xiv.
- ↑ க்ரியாவைப் பற்றி - க்ரியா பதிப்பகத்தின் இணையத்தளம்