சகதீசுபூர்

சகதீசுபூர் (Jagdishpur) என்பது கிழக்கு இந்தியாவில் பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தின் ஒரு நகரப் பஞ்சாயத்தாகும். இது உஜ்ஜெனியா குலத்தைச் சேர்ந்த ராஜபுத்திரர்களால் ஆளப்பட்ட சகதீசுபூர் தோட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் ஆட்சியாளர்களில் ஒருவரான குன்வர் சிங், 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியில் ஒரு முக்கிய நபராக இருந்தார். பீகாரில் கிளர்ச்சியின் தலைவராகவும் கருதப்பட்டார். [3]

சகதீசுபூர்
சகதீசுபூர்
துணைப்பிரிவு
Location in Jagdishpur block
Location in Jagdishpur block
சகதீசுபூர் is located in பீகார்
சகதீசுபூர்
சகதீசுபூர்
Location in Bihar, India
சகதீசுபூர் is located in இந்தியா
சகதீசுபூர்
சகதீசுபூர்
சகதீசுபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°28′N 84°25′E / 25.467°N 84.417°E / 25.467; 84.417[1]
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்போஜ்பூர்
ஏற்றம்
53 m (174 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்32,447[2]
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, போச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
802 158
தொலைபேசி இணைப்பு எண்916181
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்

இதன் துணைப்பிரிவு 232.13 கிமீ 2 (90 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 263,959 பேர் என்ற அளவில் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நகரத்தின் சரியான மக்கள் தொகை 32,447 (2011 நிலவரப்படி). [4]

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 32,447 மக்கள் தொகை இருந்தது. இது 2001 ல் 28,085 ஆக இருந்தது. இதில், 75.2% இந்துக்களும், 24.2% முஸ்லிம்களும், மற்ற அனைத்து மதக் குழுக்களும் மீதமுள்ள 0.6% என இருந்தனர். உள்ளூர் கல்வியறிவு விகிதம் 68.5% ஆக இருந்தது. இது போஜ்பூரிலேயே மிகக் குறைவானதாகும். மக்கள் தொகையில் 11.6% விவசாயிகளாகவும், 26.7% விவசாயத் தொழிலாளர்களாகவும், 6.9% வீட்டுத் தொழில்துறை தொழிலாளர்களாகவும், 54.8% பிற தொழிலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். போஜ்பூரில் 11.6% விவசாயிகள் என மிக அதிக அளவில் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jagdispur Map - Bihar, India". Mapcarta. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  2. "Census of India 2011: Bihar District Census Handbook - Bhojpur, Part A (Village and Town Directory)". Census 2011 India. pp. 46, 63, 81–83, 90, 92, 476–515, 808–809. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  3. S. Purushottam Kumar (1983). "Kunwar Singh's Failure in 1857". Proceedings of the Indian History Congress 44: 360-369. 
  4. "Census of India 2011: Bihar District Census Handbook - Bhojpur, Part B (Primary Census Abstract)". Census 2011 India. pp. 26–27. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.

மேலும் காண்க

தொகு

வீர் குன்வர் சிங் அருங்காட்சியகம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதீசுபூர்&oldid=3032475" இலிருந்து மீள்விக்கப்பட்டது