சகர்கள், மகாபாரதம்
சகர்கள், மகாபாரதம் அல்லது சிதியர்கள் , (Sakas in the Mahabharata), சமஸ்கிருத மொழி அகராதியின் படி சகர் இன மக்கள், மிலேச்சர்கள் (வெளி நாட்டினர்) என அறியப்படுகிறது. பரத கண்டத்தைச் சாராத, அயல் நாட்டவர்களை குறிக்க மிலேச்சர்கள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சகர் இன மக்களையும், யவனர்களையும், துசார மக்களையும், காம்போஜர்களையும், பார்பர இனத்தவரையும், மகாபாரத காவியத்தில் மிலேச்சர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சகர்கள் எனப்படும் சிதியர்கள் சத்திரியர் இன மக்கள் ஆவார்.[1]
சகர்களின் ஒரு பிரிவினர் ஆப சகர்கள் ஆவர். நாடோடி வாழ்க்கை நடத்தும் இம்மக்கள் நடு ஆசியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் கால்நடைகளை, குறிப்பாக குதிரைகளை மேய்த்தனர். சகர் இன மக்கள் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர்.
மகாபாரதக் குறிப்புகள்
தொகு- பரத கண்டத்தின் வடமேற்கு பகுதியின் நடு ஆசியாவின் சகர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை சகதீபம் (Sakadwipa) மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளது (மகாபாரதம் 6:11).
- இராசசூய வேள்விக்காக, செல்வம் திரட்டுவதற்கு நகுலன் பரத கண்டத்தின் மேற்குப் புற நாடுகளின் மீது போர் தொடுத்த போது, வீரமிக்க சகர்கள், காம்போஜர்கள், பகலவர்கள், கிராதர்கள், யவனர்கள் போன்ற மிலேச்சர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கியதாக கூறப்படுகிறது (2: 31).
- தருமராசன் இந்திரப்பிரஸ்தத்தில் செய்த இராசசூய வேளியில் கலந்து கொண்ட சகர்கள், தருமருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்
- குருச்சேத்திரப் போரில் சகர்கள், யவனர்கள், காம்போஜ மன்னர் சுதட்சினர் (Sudakshina) தலைமையில் கௌரவர் அணியில் இணைந்து, பாண்டவர் அணிக்கு எதிராக போரிட்டனர் (5: 198).
- போரில் சகர்களை புண்டோடு அழிப்பதாக சாத்தியகி சூளுரைக்கிறார் (7:109).
- குருச்சேத்திரப் போரில் சகர்களின் மன்னரை, பாஞ்சால நாட்டு மன்னர் துருபதன் கொன்று விடுகிறார். (5: 4).
- அருச்சுனனது அம்புகளுக்கு சகர்கள், காம்போஜர்கள், யவனர்கள், துஷாரர்கள் மற்றும் சமசப்தர்களில் பெரும் எண்ணிகையினர் பலியானர்கள். (9:1)
குருச்சேத்திரப் போருக்குப் பின்னர்
தொகுசகர்கள், புலிந்தர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாக்லீகர்கள் ஆபீரர்களின் வழித்தோன்றல்கள், குருச்சேத்திரப் போருக்குப் பின்னர், உலகம் முழுவது சிறந்த மன்னர்களாக விளங்குவார்கள் எனக் குறித்துள்ளது. (3:187).