சகாயத்ரியா

சகாயத்ரியா
டென்னிசன் பார்ப் (ச. டெனிசோனி)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
சகாயத்ரியா

இராகவன் மற்றும் பலர், 2013[1]
மாதிரி இனம்
சகாயத்ரியா டெனிசோனி
பி. டே, 1865

சகாயத்ரியா (Sahyadria) என்பது இந்தியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட சைப்ரினிட் மீன்களின் ஒரு பேரினமாகும்.[2] இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இவை முன்பு புண்டியசு பேரினத்தில் சேர்க்கப்பட்டன.[1] மிகப் பெரிய சகாயத்ரியா 15 cm (5.9 அங்) செமீ (5.9 அங்குலம்) மொத்த நீளத்தை அடையும்.[3]

சொற்பிறப்பியல்

தொகு

இந்தப் பேரினத்தின் பெயர் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளூர் பெயரான "சகாயாத்ரி" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.[1]

சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[3]

  • சகாயத்ரியா சாலக்குடீன்சிசு (மெனான், ரெமா தேவி & தொபியாசு, 1999) (மேனன், ரெமா தேவி & தோபியாசு, 1999)
  • சகாயத்ரியா டெனிசோனி (பி. டே, 1865) -டென்னிசன் பார்ப்; செவ்வரி ஏவரி பார்ப்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Raghavan, Rajeev; Philip, Siby; Ali, Anvar; Dahanukar, Neelesh (26 November 2013). "Sahyadria, a new genus of barbs (Teleostei: Cyprinidae) from Western Ghats of India". Journal of Threatened Taxa 5 (15): 4932–4938. doi:10.11609/JoTT.o3673.4932-8. 
  2. வார்ப்புரு:Cof record
  3. 3.0 3.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2019). Species of Sahyadria in FishBase. April 2019 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாயத்ரியா&oldid=4124788" இலிருந்து மீள்விக்கப்பட்டது