சகுந்தலா மஜூம்தார்
சகுந்தலா மஜும்தார் (Shakuntala Majumdar) ஒரு இந்தியாவைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ஆவார். இவர் தானேவில் உள்ள விலங்குகளுக்கு நடக்கும் கொடுமையை தடுத்து நிறுத்த சங்கம் ஒன்ற அமைத்து அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது இப்பணிக்காக நாரி சக்தி விருது பெற்றார்.
சகுந்தலா மஜூம்தார் | |
---|---|
விருது பெறும் சகுந்தலா மஜீம்தார் | |
பிறப்பு | அண். 1964 |
தேசியம் | இந்தியா |
பணி | விலங்கு நல ஆர்வலர் |
வாழ்க்கை
தொகுஇவர் 1964 ஆண்டளவில் பிறந்தார். [1] 2002 ஆம் ஆண்டில் ஆறு பேருடன் சேர்ந்து "விலங்குகள் துன்புறுத்தப்படுத்துவதை தடுக்கும் சங்கம்" என்பதின் (SPCA) கிளையை தானேவில் உருவாக்கினர் .
பணிகள்
தொகுபிப்ரவரி 2020இல் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் ஆரம்ப வாரங்களில், விலங்குகள் மூலம் வைரசு பரவக்கூடும் என்ற அச்சத்தில் விலங்குகளைத் தொடுவதைத் தவிர்க்க மக்களை ஊக்குவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. இவரும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் சுவரொட்டிகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். இந்த அச்சம் ஆதாரமற்றது என்று கூறுமாறு உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையை இவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். [2] பின்னர், இவரும் இவரது குழுவினரும் குதிரைகளின் நலனை ஒழுங்கமைக்கும் பங்கைப் மேற்கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் பொது முடக்கம் காரணமாக குதிரைகள் மூலம் வரும் வருமானம் அதன் உரிமையாளர்களுக்குத் தடைப்பட்டது . வருமானம் இல்லாதால் குதிரைகள் உணவில்லாமல் பட்டினி கிடந்தன. இவர்கள் குழு குதிரைகளுக்கு உதவியது. [3]
விருது
தொகு2016 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தன்று நாரி சக்தி விருதைப் பெற இவர் தேர்வு செய்யப்பட்டார். [4] புதுடில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். இவருடன் சேர்த்து மேலும் பதினான்கு பெண்களும் ஏழு நிறுவனங்களும் அன்று கௌரவிக்கப்பட்டனர். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mumbai's Dr Dolittle". www.pressreader.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ Sukhi, Shrutika (February 26, 2020). "Posters stoke Coronavirus Disease 2019 bias, urge people to avoid pets and strays". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
- ↑ "NGOs turn saviour for horses, give them food". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ "International Women's Day: Give women freedom to exercise choices at home, workplace says President Pranab Mukherjee". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). 2016-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ "Give women freedom to exercise choices at home, workplace: President Pranab Mukherjee". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/give-women-freedom-to-exercise-choices-at-home-workplace-president-pranab-mukherjee/articleshow/51312597.cms?from=mdr.