சக்கினாலு
சக்கினாலு (Sakinalu) என்பது இந்தியாவின் தெலங்கானாவின் வடக்கு பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு வகை சிற்றுண்டியாகும். இது எண்ணெயில் பொரித்த அரிசி மாவுடன் கலந்து வட்டமாகச் செய்யப்படுகிறது. [1] [2] இது மகர சங்கராந்தி பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது. [3] மணமகளின் பெற்றோர்களால் மணமகனின் பெற்றோருக்கு இது வழங்கப்படுகிறது. [4]
வகை | சிற்றுண்டி |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தெலங்காணாவின் வட கிழக்குப் பகுதி |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு |
தேவையான பொருட்கள்
தொகுசிறிய அளவிலான மசாலா, எள், ஓம விதைகள், மற்றும் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட அரிசி மாவுடன் சக்கினாலு தயாரிக்கப்படுகிறது.
சொற்பிறப்பியல்
தொகு"சக்கினாலு" என்ற சொல் "சக்கினாமு" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது "சக்ரம்" என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சக்கரம் அல்லது வட்டம் . அதன் வட்ட வடிவமே இதற்குக் காரணம். மகர சங்கராந்தியின் போது உழவின் புதிய நெல் அறுவடை செய்யப்படும் போது உழவர் சமூகம் இந்த பாரம்பரிய திருவிழா உணவைத் தயாரிக்கிறது.
தரம்
தொகுஇது தெலங்கானா பாரம்பரிய விழா உணவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Students celebrate ‘Sankranti Sambaralu'". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140103022607/http://www.hindu.com/2011/01/01/stories/2011010151560200.htm. பார்த்த நாள்: 9 February 2012.
- ↑ "BJP women add festive flavour to protest". The Hindu இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110921135155/http://www.hindu.com/2011/01/14/stories/2011011456600200.htm. பார்த்த நாள்: 9 February 2012.
- ↑ "Telangana supporters stage ‘rasta rokos'". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article1094429.ece. பார்த்த நாள்: 9 February 2012.
- ↑ "Trailing the Andhra food route". Times of India. http://timesofindia.indiatimes.com/Trailing-the-Andhra-food-route/articleshow/22855372.cms. பார்த்த நாள்: 9 February 2012.