சக்சினால்டிகைடு
சக்சினால்டிகைடு (Succinaldehyde) என்பது (CH2CHO)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை சக்சின்டையால்டிகைடு என்ற பெயராலும் அழைக்கலாம். மற்ற டையால்டிகைடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக சக்சின்டையால்டிகைடு அதிக வினைத்திறன் மிக்க சேர்மமாகும். பொதுவாக இதுவொரு நீரேற்றாக அல்லது மெத்தனால் வழிப்பெறுதி அசிட்டாலாக பயன்படுத்தப்படுகிறது. டிரோப்பினோன் என்ற இயற்கையாகத் தோன்றுகின்ற கரிமச் சேர்மத்திற்கு முன்னோடி சேர்மமாக சக்சினால்டிகைடு கருதப்படுகிறது [1]. குறுக்கிணைப்பு முகவராக சக்சினால்டிகைடு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இதையொத்த குளுட்டரால்டிகைடைக் காட்டிலும் குறைவான பயன்பாட்டையே கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்டையால் | |
வேறு பெயர்கள்
சக்சினால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
638-37-9 | |
ChemSpider | 12007 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12524 |
| |
பண்புகள் | |
C4H6O2 | |
வாய்ப்பாட்டு எடை | 86.09 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.064 கி/செ.மீ3 |
கொதிநிலை | 58 °C (136 °F; 331 K) 9 மி.மீ பாதரசத்தில் |
நீரேற்றமுடன் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுடெட்ரா ஐதரோபியூரானுடன் குளோரினைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து தொடர்ந்து நீராற்பகுப்பதாலும், அக்ரோலின் வழிப்பெறுதிகளை ஐதரோ பார்மைலேற்றம் செய்தும் சக்சினால்டிகைடைத் தயாரிக்கலாம். நீரிய கரைசலில் இச்சேர்மத்தின் மூலக்கூறுகள் நீரேற்றம் அடைந்து வளையமாகின்றன [2]. மெத்தனாலில் இது 2,5-டைமெத்திலாக்சில்டெட்ரா ஐதரோபியூரான் என்ற வளைய அசிட்டாலாக மாற்றமடைகிறது [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ U.S. Patent 27,10,883
- ↑ Hardy, P. M.; Nicholls, A. C.; Rydon, H. N. "The hydration and polymerisation of succinaldehyde, glutaraldehyde, and adipaldehyde" J. Chem. Soc., Perkin Trans. 2, 1972, 2270-2278. எஆசு:10.1039/P29720002270
- ↑ Christian Kohlpaintner, Markus Schulte, Jürgen Falbe, Peter Lappe, Jürgen Weber (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_321.pub2
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)