சக்சினிக் நீரிலி
சக்சினிக் நீரிலி (Succinic anhydride) என்பது (CH2CO)2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சக்சினிக் அமிலத்தின் அமில நீரிலியான இச்சேர்மம் நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சோலோன்-2,5-டையோன்[1] | |
வேறு பெயர்கள்
3,4-டை ஐதரோபியூரான்-2,5-டையோன், பியூட்டேண்டையாயிக் நீரிலி[1]
டை ஐதரோபியூரான்-2,5-டையோன் சக்சினிக் அமில நீரிலி சக்சினைல் ஆக்சைடு டை ஐதரோ-2,5-பியூராண்டையோன் | |
இனங்காட்டிகள் | |
108-30-5 | |
ChEBI | CHEBI:36595 |
ChemSpider | 7634 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19524 |
பப்கெம் | 7922 |
| |
UNII | 6RF4O17Z8J |
பண்புகள் | |
C4H4O3 | |
வாய்ப்பாட்டு எடை | 100.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிக ஊசிகள்[2] |
அடர்த்தி | 1.23 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 119 முதல் 120 °C (246 முதல் 248 °F; 392 முதல் 393 K)[3] |
கொதிநிலை | 261 °C (502 °F; 534 K)[2] |
சிதைவடையும் | |
-47.5•10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 147 °C (297 °F; 420 K)[4] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1510 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[4] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசக்சினிக் அமிலத்தை நீர் நீக்க வினைக்கு உட்படுத்தி இச்சேர்மத்தை தயாரிக்கிறார்கள். இந்நீர் நீக்க வினையானது வெப்பமூட்டல்[5] அல்லது அசிட்டைல் குளோரைடு, பாசுபோரைல் குளோரைடு [6] உதவியுடன் நிகழ்த்தப்படுகிறது.
தொழில்முறைத் தயாரிப்புகளில் மாலியிக் நீரிலியை வினையூக்க ஐதரசனேற்றம் செய்து சக்சினிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது[5].
வினைகள்
தொகுசக்சினிக் நீரிலி நீராற்பகுப்பு அடைந்து சக்சினிக் அமிலத்தைக் கொடுக்கிறது:
- (CH2CO)2O + H2O → (CH2CO2H)2
ஆல்ககால்களுடன் (ROH) வினைபுரியும் போதும் இதே வகையான வினையே நிகழ்கிறது. ஆனால் ஒற்றைப்படி எசுத்தர் விளைபொருளாகக் கிடைக்கிறது:
- (CH2CO)2O + ROH → RO2CCH2CH2CO2H
தொடர்புடைய சேர்மங்கள்
தொகுமாலியிக் நீரிலி ஒலிபீன்களுடன் சேர்ந்து ஆல்டர் ஈன் வினையில் ஈடுபட்டு ஆல்க்கீனைல்சக்சினிக் நீரிலிகளைக் கொடுக்கிறது. இத்தகைய சேர்மங்கள் காகிதம் தயாரித்தலில் பசையூட்டும் முகவர்களாகப் பயன்படுகின்றன. இச்செயல் முறையில் நீரிலிகள் செல்லுலோசு இழைகளில் ஐதராக்சில் குழுக்களைக் கொண்ட எசுத்தர்களாக உருவாகின்றன[7]. இதேபோல மாலியிக் நீரிலி பாலி ஐசோபியூட்டைலீன் உடன் சேர்ந்து பாலி ஐசோபியூட்டைலீனைல்சக்சினிக் நீரிலியைத் தருகிறது. பெட்ரோலியக் கூட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளில் இவை கட்டுறுப்புகளாகப் பயன்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 835. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 Record of CAS RN 108-30-5 in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 27 April 2010.
- ↑ McLean, Andrew; Adams, Roger (1936). "Succinic-α-d2,α'-d2 Acid and its Derivatives". J. Am. Chem. Soc. 58 (5): 804. doi:10.1021/ja01296a038.
- ↑ 4.0 4.1 Chemical data
- ↑ 5.0 5.1 வார்ப்புரு:Kirk-Othmer
- ↑ Louis F. Fieser, E. L. Martin, R. L. Shriner, and H. C. Struck (1932). "Succinic Anhydride". Organic Syntheses 12: 66. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0560.; Collective Volume, vol. 2, p. 560
- ↑ Gess, Jerome; Rend, Dominic (2005). "Alkenyl Succinic Anhydride (ASA)". Tappi Journal 4: 25-30.