சக்திமான் என்பது 13 செப்டம்பர் 1997 முதல் 27 மார்ச் 2005 வரை டிடி நேசனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஒரு மீநாயகன் புனைகதை தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் முக்கேஷ் கண்ணா சக்திமானாக இதில் நடித்தார்.[3] இத்தொடர் தமிழில் பொதிகை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.[4][5] 2019ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் இத்தொடர் காட்சிப்படுத்தப்பட்டது.[6]

சக்திமான்
வகைஅதிரடி
மீநாயகன்
உருவாக்கம்முக்கேஷ் கண்ணா
திங்கர் ஜானி
எழுத்துகலீப் ஆசாத் போபாலி
பிரிஜ்மோகன் பாண்டே
இயக்கம்திங்கர் ஜானி
நடிப்புமுக்கேஷ் கண்ணா
வைஷ்ணவி மஹந்த்
கிது கித்வானி
சுரேந்திர பால்
இலலித் பரிமூ
தாம் ஆல்டர்
முகப்பிசை"சக்திமான்"
நாடுஇந்தியா
மொழிஇந்தி, தமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்450[1][2]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்முக்கேஷ் கண்ணா
படப்பிடிப்பு தளங்கள்மும்பை
ஒளிப்பதிவுமனோஜ் சானி
தொகுப்புநசீர் அக்கீம் அன்சாரி
ஓட்டம்45-60 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பீஷ்ம் இண்டர்நேசனல்
ஒளிபரப்பு
அலைவரிசைடிடி நேசனல்
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 13, 1997 (1997-09-13)[1] –
27 மார்ச்சு 2005 (2005-03-27)[1]

தயாரிப்பு தொகு

இத்தொடரின் முதல் அத்தியாயத்திலிருந்து விளம்பர நிறுவனமாக பார்லே-ஜி இருந்தது.[7]

இத்தொடரில் வரும் சண்டைக் காட்சிகளைப் பிள்ளைகள் தாங்களும் செய்ய முயற்சித்தால் வந்த புகார்கள் காரணமாகவே இத்தொடரானது நிறுத்தப்பட்டதாக பொதுவாக நம்பப்பட்டது. எனினும், 2019ஆம் ஆண்டு தனது யூடியூப் பகுதியில் கண்ணா அதிகப்படியான ஒளிபரப்புச் செலவுகள் தனக்கு இழப்பை ஏற்படுத்தியதன் காரணமாகவே இத்தொடரை நிறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.[8]

வரவேற்பு தொகு

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தியக் குழந்தைகளுக்காக ஒளிபரப்பப்பட்ட மிகப் பிரபலமான மற்றும் நீண்டகாலம் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சக்திமானும் ஒன்றாகும்.[9] வெளியுறவுத் துறை அமைச்சர் அடல் பிகாரி வாச்பாயிடமிருந்து தனக்குப் பாராட்டுக் கடிதங்கள் கூட கிடைத்ததாக முக்கேஷ் கண்ணா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் மீது நல்ல முறையான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக அமெரிக்காவின் த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவரது படம் வெளிவந்தது.

தூர்தர்ஷனில் சக்திமான் வெளியிடப்பட்டபோது சக்திமான் தங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் குழந்தைகள் தங்கள் மீது தீ வைத்துக் கொண்டது அல்லது கட்டடங்களில் இருந்து கீழே குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது சர்ச்சைக்கு வித்திட்டது.[10] குழந்தைகள் மத்தியில் பொறுப்பான நடத்தையை ஊக்குவிப்பதற்காக இத்தொடரின் அத்தியாயங்களில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை, முக்கேஷ் கண்ணா தொலைக்காட்சியில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள் உண்மையல்ல, அவற்றை குழந்தைகள் செய்யக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொண்டார்.[11] மேலும் இந்தச் சர்ச்சைகளில் பெரும்பாலானவை போலியானவை என்றும், இத்தொடரின் பிரபலத்தைக் குறைப்பதற்காகப் பரப்பப்பட்ட வதந்திகள் என்றும் முக்கேஷ் கண்ணா குறிப்பிட்டுள்ளார்.[12]

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 Manik Sharma (1 October 2017). "Chacha Choudhary, Nagraj, Super Commando Dhruva: The league of extraordinary gentlemen". The Indian Express. https://indianexpress.com/article/lifestyle/books/chacha-choudhary-nagraj-super-commando-dhruva-the-league-of-extraordinary-gentlemen-4868487/. 
  2. "SHAKTIMAAN (450 EPISODES) - 1997 - Rights". Ultra Media and Entertainment Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
  3. "Chacha Choudhary, Nagraj, Super Commando Dhruva: The league of extraordinary gentlemen". The Indian Express (in Indian English). 1 October 2017. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  4. "Screen On & Off". www.telegraphindia.com.
  5. "STAR - Programme Guide". 16 May 2009. Archived from the original on 16 May 2009.
  6. "17 classic shows from the 90s you can watch on Amazon Prime Video, Netflix, Hotstar, SonyLIV and Zee5". GQ India.
  7. "Mukesh Khanna: No More Mythological". Screen. November 1997. Archived from the original on 31 October 2003. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  8. "14 साल बाद मुकेश खन्ना ने बयां किया दर्द, इस वजह से बंद करना पड़ा था 'शक्तिमान'" (in hi). Amar Ujala. 17 August 2019. https://www.amarujala.com/photo-gallery/entertainment/bollywood/mukesh-khanna-on-shaktimaan-why-this-show-off-air. 
  9. [1] [தொடர்பிழந்த இணைப்பு]
  10. "The Shaktimaan effect". Indian Express. 22 February 1999. http://www.indianexpress.com/Storyold/81040/. 
  11. "Entertainment News: Latest Hollywood & Bollywood News, Movies Releases & Reviews". The Indian Express. Archived from the original on 21 January 2010.
  12. "'Shaktimaan' deaths instigated:Producer". The New Indian Express. 9 January 1999. Archived from the original on 5 April 2012. பார்க்கப்பட்ட நாள் 22 October 2011.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்திமான்&oldid=3507761" இலிருந்து மீள்விக்கப்பட்டது