சங்கர சுப்பையர்

சங்கர சுப்பையர் ( Shungrasoobyer) (1836-1904) இவர் ஓர் இந்திய நிர்வாகியாக இருந்தார். 1892 மற்றும் 1898க்குமிடையே திருவிதாங்கூர் மாநிலத்தின் திவானாக பணியாற்றினார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சங்கர சுப்பையர் 1836 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரில் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார். திருவனந்தபுர ராஜாவின் இலவச பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைப் பெற்ற இவர், 1853 ஆம் ஆண்டில் படிப்பை முடித்ததும், திருவிதாங்கூர் மாநில அரசுப் பணியில் ஆசிரியராக சேர்ந்தார்.

ஆட்சிப் பணி

தொகு

சங்கர சுப்பையர் திறமைகளை அப்போதைய திவான் சர் டி. மாதவ ராவ் கண்டுபிடித்தார். அவர் இவரை துணை காவல்துறை அதிகாரியாக நியமித்தார். சங்கர சுப்பையர் கல்வி இயக்குநராகவும், எல்லை ஆணையாளராகவும் பணியாற்றினார். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இராச்சியம் இடையே ஒரு எல்லை மோதலைத் தீர்க்கவும் இவர் உதவினார்.

1882 ஆம் ஆண்டில், சங்கர சுப்பையர் வருவாய் குடியேற்றத்தின் திவானாக அப்போதைய திவான் வி.ராமையங்கார் என்பவரால் நியமிக்கப்பட்டார். நஞ்சாநாடு, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் குடியேற்றத்தை நிறைவுசெய்து தனது பணியை சிறப்பாகச் செய்தார். 1888 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சங்கர சுப்பையர் 1894 இல் பதவியேற்றுக் கொண்டார்.

திவான் பதவிக்காலம்

தொகு

1892 ஆம் ஆண்டில் சங்கர சுப்பையர் திவானாக பணிபுரிந்த காலத்தில் திருவிதாங்கூர் தலித்துகள் மேம்பாட்டிற்கான ஒரு இயக்கத்தைக் கண்டது. 1888 இல் அமைக்கப்பட்ட திருவிதாங்கூர் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சாதி இந்து ஈழவர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, 1895 ஆம் ஆண்டில், ஈழவர்கள் திவானுக்கு மேலும் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி ஒரு கோரிக்கையை வழங்கினர். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. [2]

பிற்கால வாழ்க்கையும் இறப்பும்

தொகு

சங்கர சுப்பையர் 1898 ஏப்ரலில் ஓய்வு பெற்று, ரூ.800 ஓய்வூதியமாக பெற்றார். பிரிட்டிசு இந்திய அரசு இவரை இந்தியப் பேரரசின் தோழராக மாற்றியதன் மூலம் இவரது சேவைகளை அங்கீகரித்தது. காலனித்துவ கால சென்னை ஆளுநரான சர் ஆர்தர் ஹேவ்லாக் இவரை மெட்ராஸ் சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக நியமித்தார்.

செப்டம்பர் 1904 இல் சங்கர சுப்பையர் இறந்தார்.  

குறிப்புகள்

தொகு
  1. "List of Diwans of Travancore". worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2008-07-12.
  2. Social Mobility in Kerala: Modernity and Identity in Conflict.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_சுப்பையர்&oldid=2995535" இலிருந்து மீள்விக்கப்பட்டது