சங்காட்டு பகவதி கோயில்
சங்காட்டு பகவதி கோயில், இந்தியாவின் கேரளாவில் கல்லம்பலத்தில் உள்ளது. [1]இது ஒரு இந்து மதக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் கண்ணகி ( பார்வதி ) ஆவார்.
இக்கோயிலில் கும்பம் (பிப்ரவரி-மார்ச்) மாதத்தில் வரும் பரணிஒரு சிறப்பு நாளாகக் கருதப்பட்டு, பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படுகிறது. சங்கத்து தேசத்தின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டு 'முகிலன்' என்ற நூலை. இந்த இடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தீபு எழுதியுள்ளார்.
வரலாறு
தொகுகண்ணகியை மணந்த கோவலன். புகாரில் வைசிய சமூகத்தைச் சேர்ந்த பணக்கார வணிகரின் மகன் ஆவார். கோவலன் ஒருநடனப் பெண்மணியான மாதவியைச் சந்தித்து உறவுகொண்டு, தன் செல்வம் முழுவதையும் அவளுக்காகச் செலவிட்டான். கடைசியில் பணல்லாமல் போன கோவலன் தன் தவறை உணர்ந்து, மனைவி கண்ணகியிடம் திரும்பிச் சென்றான். கண்ணகியின் தன் விலையுயர்ந்த சிலம்புகளை விற்று, மதுரையில் வாணிபம் செய்து, தன் செல்வத்தைத் திரும்பப் பெற நினைத்தான் கோவலன்.
மதுரையை பாண்டிய மன்னன் முதலாம் நெடுஞ்செழியன் ஆண்டு வந்தான். கோவலன் அந்தச் சிலம்பைகொலுசை விற்க முயன்றபோது, அது அரசியின் திருடப்பட்ட சிலம்பு எனத் தவறாகக் கருதப்பட்டது. கோவலன் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை எதுவுமின்றி தலை துண்டிக்கப்பட்டான். இதுபற்றி கண்ணகிக்கு தெரிவிக்கப்பட்டதும், அவள் கோபமடைந்து, தன் கணவன் குற்றமற்றவன் என்பதை அரசனிடம் நிரூபிப்பதற்காகப் புறப்பட்டாள்.
கண்ணகி மன்னனின் அரசவைக்கு வந்து, கோவலனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பை உடைத்தாள். அதில் மாணிக்கங்கள் இருப்பதைக் காட்டினாள். ராணியின் சிலம்பில் முத்துக்கள் இருந்தன. தவறை உணர்ந்த மன்னன், நீதி தவறியதால் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டான். மதுரை மாநகரம் முழுவதும் தீப்பற்றி எரியும்படி கண்ணகி சாபமிட்டாள். பாண்டியர்களின் தலைநகர் எரிந்து, பெரும் இழப்பு ஏற்பட்டது. சிவபெருமானின் வேண்டுகோளின்படி, அவள் அமைதியாகி, பின்னர், முக்தி அடைந்தாள்.
திருவிழாக்கள்
தொகுஇங்கு மலையாள மாதkன மேடத்தில் (ஏப்ரல்-மே) உத்திரம் நட்சத்திரத்தில் கோவிலை சுற்றி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி பொங்கல் படைக்கும் பொங்கலா திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் திருவோண தினத்தன்று கோயில் வளாகத்தில் ஓணவிழா உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பேருந்து வசதி
தொகுதிருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் இருந்து கோயிலை எளிதில் அடைய அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.