சங்கீதா கிருட்டிணசாமி

சங்கீதா கிருஷ்ணசாமி (Sangeeta Krishnasamy) மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகையும், வடிவழகியுமாவார். [1] வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான கோவா என்ற தமிழ்ப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு பல உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்களில் தோன்றியுள்ளார். [2]

சங்கீதா கிருட்டிணசாமி

2018இல் "வெடிகுண்டு பசங்க" படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கீதா
தொழில் வடிவழகி, நடிகை

2015-ஆம் ஆண்டில் இரண்டு வெற்றிகரமான மலேசிய தமிழ்த் திரைப்படங்களான "வெட்டி பசங்க" மற்றும் "வெண்ணிற இரவுகள்" ஆகிய படங்களில் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். வெண்ணிற இரவுகள் ஐரோப்பா முழுவதும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

2014-இல் நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருதை வென்ற பின்னர் பாராட்டப்பட்ட மலேசியத் தமிழ் திரைப்படமாக மாறியது. பின்னர் 20 ஆம் ஆண்டில் மலேசிய கலையுலக விருதுகளில் அனைத்து பிரிவுகளிலும் அனைத்து 5 விருதுகளையும் பெற்றது. [3]

சுயசரிதை தொகு

இவர், ஒரு மலேசிய இந்தியர் ஆவார். இவர் கோலாலம்பூரில் பிறந்தார். பின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். படிக்கும்போதே நிக்கனின் இணையவழி வணிகத்திற்கு விளம்பர நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார்.

தொழில் தொகு

"அடிவிறகு" படத்தில் நடித்ததன் மூலம் மலேசியத் திரைப்படங்களில் இவரது முதல் முயற்சி இருந்தது. இப்படத்திற்காக 2017 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் .மேலும், புதுமுகமாக மலாய் மொழியில் இவரது முதல் படம் என்றாலும், சிறந்த நடிகைக்கான முதல் ஐந்து இடங்களில் இவர் இடம் பெற்றார்.

இப்படம் பின்னர் அனுகேரா ஸ்க்ரின் மற்றும் கோலாலம்பூர் திரைப்பட விமர்சகர்கள் விருதையும் வென்றது. இதன் மூலம் இவர் முதல் இந்தியராக மட்டுமல்ல, ஒரே ஆண்டில் மூன்றையும் வென்ற முதல் நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Malaysian Tamil Actress".
  2. http://www.selliyal.com/?p=65090
  3. http://www.dailyseni.com.my/v3/a-conversation-with-malaysian-actress-sangeeta-krishnasamy/[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_கிருட்டிணசாமி&oldid=3622284" இலிருந்து மீள்விக்கப்பட்டது