சங்கீத் சிவன்
சங்கீத் சிவன் (Sangeeth Sivan, 1959 – 8 மே 2024) மலையாளத் திரைப்படத்துறையிலும் இந்தி திரைப்படத் துறையிலும் பணியாற்றிய இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமாவார்.[1][2][3]
சங்கீத் சிவன் Sangeeth Sivan | |
---|---|
பிறப்பு | 1959 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
இறப்பு | (அகவை 65) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
அறியப்படுவது | வியோகம் யோதா நிர்ணயம் கியா கூல் கை கம் |
பெற்றோர் | சிவன் (தந்தை) |
உறவினர்கள் | சந்தோஷ் சிவன் (தம்பி) சஞ்சீவ் சிவன் (தம்பி) |
வயோகம் (1990), யோதா (1992), கியா கூல் கை கம் (2005), யமலா பகலா தீவானா 2 (2013) ஆகிய திரைப்படங்களை இயக்கியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[4][5][3]
தொழில் வாழ்க்கை
தொகுசிவன் தனது வாழ்க்கையைத் ஆமிர் கான், பங்கஜ் கபூர் நடித்த ராக் என்ற திரைப்படத்தில் தனது மகனின் அறிமுக இயக்குனர் பாசு பட்டாச்சார்யா நிர்வாக தயாரிப்பாளராக இவரை அழைத்துச் சென்றபோது துவங்கினார்.[3] ரகுவரன் நடித்த வியோகம் என்ற வெற்றிகரமான மலையாளத் திரைப்படத்தின் மூலம் விரைவில் இயக்குநராகவும் அறிமுகமானார். இவர் இரண்டாவதாக இயக்கிய யோதா இவருக்கு நாடு தழுவிய அங்கீகாரத்தை அளித்தது. ஆறு மலையாளத் திரைப்படங்களை இயக்கிய பிறகு, சன்னி தியோல் நடித்த தனது முதல் இந்தித் திரைப்படமான சோர் திரைப்படத்தை இயக்கினார். இருப்பினும், படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை, ஆனால் சிவனின் இயக்கத் திறன் பல தயாரிப்பாளர்களால் நன்கு பாராட்டப்பட்டது. சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இவர் ஜாக்கி செராப் சந்தியா படத்திலும், அதைத் தொடர்ந்து பாண்டலூனின் சுரா லியா கை தும்னே படத்திலும் பணியாற்றத் தொடங்கினார்.[3]
மோகன்லாலுடன் இணைந்து யோதா, காந்தர்வம் நிர்ணைம் ஆகிய மூன்று திரைப்படங்களில் சிவன் இணைந்து பணியாற்றினார்.[3]
2012 இல், தியோல் குடும்பத்துடன் இணைந்து யமலா பகலா தீவானா 2 என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்க சிவன் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார்.[3]
வாழ்க்கை வரலாறு.
தொகுசிவன் 2024 மே 8 அன்று தனது 65-ஆவது வயதில் இறந்தார். இவருக்கு மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் சஜானா, சாந்தனு ஆகியோர் உள்ளனர்.[6][7][3]
இவர் இறக்கும் போது மலையாளத் திரைப்படமான ரோமன்சம் திரைப்படத்தின் மறுஆக்கமாக இந்தியில் கப்காபி திரைப்படத்தை இயக்கவிருந்தார்.[2]
திரைப்படவியல்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sangeeth Sivan, director of 'Yoddha' and 'Apna Sapna Money Money', dies at 65, Sunny Deol, Riteish Deshmukh, Tusshar Kapoor express shock". The Times of India. 8 மே 2024. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2024.
- ↑ 2.0 2.1 "'Romancham' gets a Hindi remake". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 22 மார்ச்சு 2024. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2024.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Veteran filmmaker Sangeeth Sivan, known for Yodha, Gandharvam, Yamla Pagla Deewana 2, passes away". Indian express.
- ↑ "Sangeeth Sivan, on his return to Malayalam films- The New Indian Express". Archived from the original on 1 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2014.
- ↑ "List of Malayalam Movies directed by Sangeeth Sivan".
- ↑ "Renowned filmmaker Sangeeth Sivan passes away at 65". Kaumudi Online. 8 மே 2024. https://keralakaumudi.com/en/news/news.php?id=1301366&u=renowned-filmmaker-sangeeth-sivan-passes-away-at-65.
- ↑ "സംവിധായകനും ഛായാഗ്രാഹനുമായ സംഗീത് ശിവൻ അന്തരിച്ചു". Mathrubhumi. 8 மே 2024. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2024.