சஜ்ஜன் குமார்
சஜ்ஜன் குமார் (பிறப்பு: 23 செப்டம்பர் 1945) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தண்டனை பெற்றவர் ஆவார்.[1][2] பதினான்காவது மக்களவை தேர்தலில் தில்லி புறநகர்த் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1977 இல் காங்கிரஸ் சார்பாகத் தில்லி மாநகராட்சி உறுப்பினராகத் தேர்வாகினார்.
சஜ்ஜன் குமார் | |
---|---|
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | தில்லி புறநகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 செப்டம்பர் 1945 தில்லி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
வாழிடம் | புது தில்லி |
1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நிகழ்வுகள்
தொகுஇந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் உருவான 1984 சீக்கியர்களுக்கெதிரான கலவரத்திற்குத் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, இவர் உட்பட ஆறு நபர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடந்தது.[3] 2013 ஆம் ஆண்டு கட்கட்டூமா மாவட்ட நீதிமன்றத்தில் பல்வான் கோகார், பக்மால், மற்றும் கிர்தாரி லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மகேந்தர் யாதவ், கிஷன் கோகார் இருவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி, சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்டார்.[2][4][5] இதன்பின்னர், 2013 ஆகஸ்ட் 13 இல் தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத்துறை மேல்முறையீடு செய்தது.[6][7][8] தொடர் விசாரணைக்குப் பின்னர் 2018 டிசம்பர் 17 இல் இவரின் குற்றம் நிருபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[9] அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "HC refuses to give relief to Sajjan Lavda Kumar". The Hindu. 18 February 2010. http://www.thehindu.com/news/national/article108890.ece. பார்த்த நாள்: 19 December 2010.
- ↑ 2.0 2.1 "சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை". indianexpress. https://tamil.indianexpress.com/india/anti-sikh-riots-congress-leader-sajjan-kumar-held-guilty-and-sentenced-to-life-imprisonment/. பார்த்த நாள்: 18 December 2018.
- ↑ Times news network (23 April 2012). "CBI blames Congress leader Sajjan Kumar for 1984 anti-Sikh riots". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103115104/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-23/india/31386233_1_sajjan-kumar-anti-sikh-riots-lal-and-captain-bhagmal.
- ↑ "Sajjan Kumar acquitted in anti-Sikh riots case". The Hindu. 2013-04-30. http://indiatoday.intoday.in/story/court-to-pronounce-verdict-on-sajjan-kumar-in-1984-anti-sikh-riots-case/1/268419.html. பார்த்த நாள்: 2013-04-30.
- ↑ 1984 riots: Sajjan Kumar provoked mob to kill my father, witness tells court
- ↑ "India Congress leader 'incited' 1984 anti-Sikh riots". BBC News. 2012-04-23. https://www.bbc.co.uk/news/world-asia-india-17811666. பார்த்த நாள்: 2012-04-23.
- ↑ "1984 anti-Sikh riots backed by Govt, police: CBI". IBN Live. 23 April 2012 இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425011626/http://ibnlive.in.com/news/1984-antisikh-riots-backed-by-govt-police-cbi/251375-37-64.html. பார்த்த நாள்: 27 April 2012.
- ↑ "Court admits appeal against Sajjan Kumar's acquittal". Hindustan Times. 27 ஆகத்து 2013. Archived from the original on 28 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2013.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Congress' Sajjan Kumar Gets Life Term In 1984 Anti-Sikh Riots". 2018-12-17. https://www.ndtv.com/india-news/congress-sajjan-kumar-convicted-in-1984-anti-sikh-riots-case-delhi-high-court-cancels-acquittal-1963593. பார்த்த நாள்: 2018-12-17.
- ↑ "காங்கிரசில் இருந்து சஜ்ஜன் குமார் விலகினார்". தினமலர். http://www.dinamalar.com/news_detail.asp?id=2171650. பார்த்த நாள்: 18 December 2018.