சஞ்சீவ் சிம்மல்கி
பண்டிட் சஞ்சீவ் சிம்மல்கி (Sanjeev Chimmalg) (பிறப்ப:சூலை 29 1972) இவர் ஒரு இந்திய இசை இசையமைபாளரும், இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார். இவர் சி.ஆர்.வியாசு என்பவரின் சீடர். இவரது இசை கிராணா கரானாவின் (பாடும் பாணி) குரல் கலாச்சாரத்தையும், குவாலியர் கரானா / ஆக்ரா கரானாவின் பாண்டிஷ் சார்ந்த பாடலையும் பிரதிபலிக்கிறது. [1]
பின்னணி
தொகுசஞ்சீவ், கர்நாடகாவின் தார்வாடு நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் எம். வி. சிம்மல்கி என்பவருக்கு மும்பையில் பிறந்தார். இவரது தாத்தா சிம்மல்கி ஒரு பிரபலமான தப்லா கலைஞராக இருந்தார்.
தொழில்
தொகுஇவர் கணினிப் பொறியாளராக தொழில் ரீதியாக பயிற்சி பெற்றவர். இவர் தனது ஆரம்ப பயிற்சியை மாதவ குடி என்பவரிடமிருந்து பெற்றார். பின்னர் சி. ஆர். வியாசின் கீழ் வந்தார். மும்பையில் டி. ஆர். பாலாமணி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் கீழ் கர்நாடக இசையிலும், புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர் டி. எஸ். நந்தகுமாரின் கீழ் கொன்னக்கோலிலும் பயிற்சி பெற்றார்.
மும்பை, புனே, இந்தூர், கொல்கத்தா, மிராஜ், நாக்பூர் போன்ற இடங்களில் பல இடங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் .
விருதுகளும் அங்கீகாரமும்
தொகு- 2007 - மராத்தித் திரைப்படமான ' ஆயி ஷப்பத் ' படத்திற்காக சிறந்த ஆண் பின்னணி பாடல் விருது. [2]
- 2006 - ஜீ தொலைக்காட்சி கௌரவ் புராஸ்கர், வி சாந்தரம் புராஸ்கர் மற்றும் மகாராட்டிரா ஷாசன் புராஸ்கர் ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
- 2005-2006 - ஒரு சான்று மற்றும் ரூ .25,000 / - ரொக்கத்தைக் கொண்ட சங்கீத சிரோமணி விருது.
- 1995 முதல் 98 வரை - இந்திய அரசால் தேசிய உதவித்தொகை வழங்கப்பட்டது.
- 1993 - அகில இந்திய வானொலியால் நடத்தப்பட்ட 23 வயதுக்குட்பட்ட அகில இந்திய இளைஞர்களின் வெற்றியாளர்.
குறிப்புகள்
தொகு- ↑ "Profile - Sanjeev Chimmalgi". பார்க்கப்பட்ட நாள் 17 April 2012.
- ↑ "Introduction". chimmalgi.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- Sanjeev Chimmalgi on Kshitij Group
- ஆல்மியூசிக் தளத்தில் சஞ்சீவ் சிம்மல்கி பக்கம்