சதியா (Sadiya), பண்டைய இந்தியாவின் சுதியா நாட்டின் மூன்றாவது தலைநகராக 1524 முடிய இருந்தது.[1] தற்போது சதியா நகரம், அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சதியாவில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. மல்லிகைப் பூ போன்ற பூக்களுக்கு சதியா நகரம் பெயர் பெற்றது.

சதியா
শদিয়া
ஊர்
அடைபெயர்(கள்): Starting point of Assam
சதியா is located in அசாம்
சதியா
சதியா
அசாமில் சதியாவின் அமைவிடம், இந்தியா
சதியா is located in இந்தியா
சதியா
சதியா
சதியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°50′N 95°40′E / 27.83°N 95.67°E / 27.83; 95.67
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்தின்சுகியா
ஏற்றம்
123 m (404 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
786157
வாகனப் பதிவுAS

நிர்வாகம்

தொகு

சதியா நகரம் ஒரு அசாம் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியைக் கொண்டுள்ளது.

தின்சுகியா மாவட்டத்தின் மூன்று உட்கோட்டங்களில், சதியா உட்கோட்டமும் ஒன்றாகும்.[2]

புவியியல்

தொகு

அசாம் மாநிலத்தின் வடக்கிழக்கில், அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சதியா நகரம் ஆகும். 27°50′N 95°40′E / 27.83°N 95.67°E / 27.83; 95.67.[3] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 123 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பிரம்மபுத்திரா ஆற்றின் அகலமான மூன்று துணை ஆறுகளான திகாங் ஆறு, திபாங் ஆறு மற்றும் லோகித் ஆறுகள் சதியா நகரத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது.

பூபென் ஹசாரிகா பாலம்

தொகு
 
அசாமின் சதியா நகரத்தையும், அருணாசலப் பிரதேசத்தின் தோலாவையும் இணைக்கு 9.15 கிமீ நீளமுடைய பூபென் ஹசாரிகா பாலம்

பிரம்மபுத்திர ஆற்றின் பெரிய துணை ஆறான லோகித் ஆற்றின் மீது, அருணாசலப் பிரதேசத்தின் தோலா நகரத்தையும், அசாமின் சதியா நகரத்தையும் இணைக்கும் வகையில் 9.15 கிமீ நீளம் கொண்ட பூபென் ஹசாரிகா பாலம் 26 மே 2017 அன்று திறக்கப்பட்டது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. (Col. Ved Prakash, ப. 912)
  2. "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  3. Falling Rain Genomics, Inc - Sadiya
  4. இந்தியாவின் மிக நீளமான பாலம்: நிறைவுவேறியது 20 ஆண்டு கனவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதியா&oldid=3586829" இலிருந்து மீள்விக்கப்பட்டது