சதுரங்கத்தின் வரலாறு

சதுரங்கம் (Chess) 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த வல்லாட்டம், சதுரங்கம் போன்ற விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் காஸ்ட்டில்லின் அல்போன்சோ X, இன் ஆதரவில், செஸ், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் செஸ் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது. இந்த விளையாட்டை இருவர் ஆடலாம்.ஒவ்வொருவருக்கும் பதினாறு காய்கள் உண்டு.(ராஜா (King) ,ராணி(Queen) , யானை(அல்லது) கோட்டை(Rook) , மந்திரி(Bishop) ,குதிரை(Knight) , மற்றும் சிப்பாய்(pawn) என்பவை) ஒருவர் கறுப்பு நிறக் காய்களையும் மற்றொருவர் வெள்ளை நிறக்காய்களையும் வைத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கும் பதினாறு காய்கள் உண்டு:

காய் ராஜா ராணி யானை மந்திரி் குதிரை வீரன்(சிப்பாய்)
எண்ணிக்கை 1 1 2 2 2 8
குறியீடு





15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.

மேற்படி மாற்றங்கள் செஸ்ஸை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள செஸ் ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செஸ் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு

==சதுரங்கக் காய்கள்=king =

உசாத்துணைகள்

தொகு
பிரிட்டானிக்காவிலிருந்து
  • "Chess: Ancient precursors and related games.". Encyclopædia Britannica. (2002). Encyclopædia Britannica. 
  • "Chess: Development of Theory". Encyclopædia Britannica. (2002). Encyclopædia Britannica. 
  • "Chess: The time element and competition". Encyclopædia Britannica. (2002). Encyclopædia Britannica. 
  • "Chess: Chess composition". Encyclopædia Britannica. (2002). Encyclopædia Britannica. 
  • "Chess (History): Standardization of rules". Encyclopædia Britannica. (2002). Encyclopædia Britannica. 
  • "Chess: Set design.". Encyclopædia Britannica. (2007). Encyclopædia Britannica. அணுகப்பட்டது 2007-10-28. 
  • "Chess: Introduction to Europe". Encyclopædia Britannica. (2007). Encyclopædia Britannica. அணுகப்பட்டது 2007-10-28. 
  • "Chinese chess". Encyclopædia Britannica. (2007). Encyclopædia Britannica. அணுகப்பட்டது 2007-10-28. 
  • "Shogi". Encyclopædia Britannica. (2002). Encyclopædia Britannica. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கத்தின்_வரலாறு&oldid=3616698" இலிருந்து மீள்விக்கப்பட்டது