சதுர்புஜக் கோயில்

சதுர்புஜக் கோயில் (Chaturbhuj Temple), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில், நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சதுர்புஜக் கோயில் மற்றும் ஓர்ச்சா கோட்டை வளாகத்தை 16-ஆம் நூற்றாண்டில் அடிக்கல் நாட்டி கட்டத் துவங்கியவர் ஓர்ச்சா சமஸ்தானத்தை ஆண்ட புந்தேல இராஜபுத்திர குல மன்னர் மதுகர் ஷா ஆவார். இதனை கட்டி முடித்தவர் அவரது மகன் வீர் சிங் ஆவார்.[1][2][3][4]இக்கோயில் 344 அடி உயரம் கொண்டது.

ஓர்ச்சா சதுர்புஜக் கோயில்
சதுர்புஜக் கோயில், ஓர்ச்சா
சதுர்புஜக் கோயில் is located in மத்தியப் பிரதேசம்
சதுர்புஜக் கோயில்
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஓர்ச்சாவில் சதுர்புஜக் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:நிவாரி மாவட்டம்
அமைவு:ஓர்ச்சா
ஆள்கூறுகள்:25°21′0″N 78°8′24″E / 25.35000°N 78.14000°E / 25.35000; 78.14000
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ஓர்ச்சா சமஸ்தானத்தின் புந்தேல இராஜபுத்திர குலத்தினர்

அமைவிடம்

தொகு

சதுர்புஜக் கோயில் குவாலியரிலிருந்து 119 கிலோ மீட்டர் தொலைவில், ஜான்சி-கஜுராஹோ நெடுஞ்சாலையில உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான்சி நகரத்தில் உள்ளது. [5]

சிறப்புகள்

தொகு
 
344 அடி உயரம் கொண்ட இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்புஜக் கோயில், ஓர்ச்சா

பேட்வா ஆற்றின் கரையில் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்புஜக் கோயிலின் அடித்தளம் 4.5 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோயிலின் உயரம் 344 அடி (105 மீட்டர்) உயரம் கொண்டது. [2][6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Quick Breaks: Orchha". Rediff.
  2. 2.0 2.1 "Interior of the Chaturbhuj Temple from the entrance archway, Orchha". British Library.
  3. Singh & Singh 1991, ப. 57.
  4. Asher 2003, ப. 57.
  5. "Orchha". Official website of Madhya Pradesh Tourism. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
  6. Mitra 2009, ப. 43.

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chaturbhuj Temple, Orchha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர்புஜக்_கோயில்&oldid=3373060" இலிருந்து மீள்விக்கப்பட்டது