சதுர யார்
சதுர யார் (Square Yard) என்பது, இம்பீரியல் அளவை முறையில் பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ஓர் அலகு. இம்பீரியல் அளவை முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது பொதுவாகப் பயன்படுகிறது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய நாடுகளிலும் கூட சில தேவைகளுக்கு இவ்வலகும் பயன்பாட்டில் உள்ளதைக் காணமுடிகிறது. ஒரு யார் (Yard) நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவே ஒரு சதுர யார். ஒரு யார் 3 அடிகளுக்குச் சமமானது. தமிழில் இதைச் சுருக்கமாக எழுதும்போது "ச.யார்" அல்லது யார்2 எனக் குறிப்பது வழக்கம்.
அலகு மாற்றம்
தொகு- ஒரு சதுர யார் = 1,296 சதுர அங்குலம் 36 அங்குல நீளம் கொண்டது ஒரு யார் அல்லது ஒரு கெஜம்[1]
- ஒரு சதுர யார் = 9 சதுர அடிகள்.
- ஒரு சதுர யார் ≈0.00020661157 ஏக்கர்கள்.
- ஒரு சதுர யார் ≈0.000000322830579 சதுர மைல்கள்.
- ஒரு சதுர யார் = 8 361.2736 சதுர சதமமீட்டர்கள்.
- ஒரு சதுர யார் = 0.83612736 சதுர மீட்டர்கள்.