சத்தியமங்கலம் முத்து
சத்தியமங்கலம் முத்து (1942-1965[1])என்று அறியப்படும் முத்து, இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963 அமல்படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த போராளி ஆவார்.
வாழ்க்கை
தொகுசத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் 1942 இல் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் சின்னச்சாமி, மாரியப்பன் [2] 5ஆம் வகுப்புவரை படித்திருந்த இவர், ஒரு சரக்குந்து பணிமனையில் வேலை பார்த்து வந்தார்.[3]
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்
தொகுமுத்துவுக்கு தி.மு.க மீதும் தமிழ் மீதும் ஆர்வம் இருந்தது. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் வந்தார். பலர் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் இறந்த செய்திகளையும், ஆயிரக்கணக்கானோர் தடியடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கொடுமைகளைப் படித்தும் கேள்விப்பட்டும் அறிந்து மனம் வருந்தினார்.
தீக்குளிப்பு
தொகுதானும் தீக்குளிக்க முடிவு செய்தார். 1965 பிப்ரவரி மாதம், ஒரு வியாழக்கிழமை சத்தியமங்கலத்தில் மாலை 7 மணியளவில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக”” என்று முழங்கியவாறே எரிந்து போனார். மருத்துவமனையில் கொண்டு சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை.[4] உடல் சொந்த ஊரான குமாரபளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதே ஆண்டு மதுரையில் நடந்த தி.மு.க மாநாட்டு அரங்கிற்கு சத்தியமங்கலம் முத்துவின் பெயர் சூட்டப்பட்டது
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 17
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 18
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 18