சத்தீசு குமார்
சத்தீசு குமார் யாதவ் (Satish Kumar Yadav) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள புலந்தசாகர் நகரத்தைச் சேர்ந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரராவார். 1989 ஆம் ஆண்டு மே மாதம் 4 அன்று இவர் பிறந்தார்.91 கிலோ எடைக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் அதி அதிக எடை பிரிவில் [1] இந்தியாவின் சார்பாக குத்துச்சண்டை போட்டிகளில் இவர் பங்கேற்று வருகிறார். தென் கொரியாவின் இஞ்சியோனில் நடந்த 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், அதி அதிக எடை பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். [2]
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 மே 1989 புலந்தசகர், உத்தரப் பிரதேசம் | ||||||||||||||||||||||||||||
உயரம் | 1.88 m (6 அடி 2 அங்) (2014) | ||||||||||||||||||||||||||||
எடை | அதி அதிக எடை (+91 கி.கி) | ||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||
விளையாட்டு | குத்துச் சண்டை | ||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வாழ்க்கைக் குறிப்பு
தொகுநான்கு மகன்களைப் பெற்ற புலந்தசாகர் விவசாயிக்கு பிறந்த சத்தீசு குமார் தனது மூத்த சகோதரரைப் போலவே இராணுவத்தில் சேர விரும்பினார். 2008 ஆம் ஆண்டில் விரும்பியது போலவே இவர் ஒரு சிப்பாயாக சேர்ந்தார். ராணிக்கேட்டுக்குச் சென்ற இவர் அங்கு நடைபெற்ற ஒரு குத்துச்சண்டை முகாமின் போது அடையாளம் காணப்பட்டார். குத்துச்சண்டை விளையாட்டை முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். [3] அந்த நேரத்தில் குத்துச்சண்டை என்னவென்று கூட இவருக்குத் தெரியாது. உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனம் நிகழ்த்தும் மல்யுத்தத்தையே இவர் குத்துச்சண்டை என்று நினைத்துக் கொண்டிருந்தார். அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் மற்றும் சான் இயீனாவைப் பற்றியும் சிறிதளவு மட்டுமே கேள்விப்பட்டிருந்தார். [4]
விருதுகள்
தொகுசத்தீசு குமார் யாதவுக்கு 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அருச்சுனா விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Asian Games 2014: Satish Kumar fails to advance, settles for bronze in 91 kg boxing". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
- ↑ "Lovlina, Ashish and Satish earn their Olympics berth". Olympic Channel. 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
- ↑ "History-maker Satish Kumar at the ntion's service". Olympic Channel. 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ "How Satish Kumar blurred the lines between WWE and boxing". Olympic Channel. 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2020.
- ↑ "National Sports Awards 2018". The Hindu.
புற இணைப்புகள்
தொகு- Satish Kumar
- சுயவிவரம் incheon2014.kr பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம்