ராணிகேத்
ராணிகேத் (Ranikhet) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடம் மற்றும் இந்திய இராணுவப் பாசறை நகரம் ஆகும்.[1] இராணிகேத் நகரம் இமயமலையில் 1,869 மீட்டர்கள் (6,132 அடி) உயரத்தில் உள்ளது.[1] இந்நகரம் இராணுவப் பாசறை மக்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] இப்பாசறை நகரத்தில் குமாவுன் மற்றும் நாகா ரெஜிமெண்ட்களின் மருத்துவமனைகள் உள்ளது.
ராணிகேத்
रानीखेत இராணியின் நிலம் | |
---|---|
பாசறை நகரம் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 29°39′N 79°25′E / 29.65°N 79.42°E | |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | அல்மோரா |
ஏற்றம் | 1,869 m (6,132 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,886 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, சமஸ்கிருதம் |
• உள்ளூர் மொழி | குமாவுனி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் 263645 | 263645 |
வாகனப் பதிவு | UK, 20 |
இணையதளம் | uk |
அமைவிடம்
தொகுராணிகேத் இராணுவப்பாசறை, அல்மோராவிலிருந்து 46 கிமீ, ரிஷிகேசிலிருந்து 282 கிமீ, மற்றும் டேராடூனிலிருந்து 315 கிமீ தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7 வார்டுகளும் 4,760 வீடுகளும் கொண்ட இராணிகேத் பாசறை நகரத்தின் மக்கள்தொகை 18,886 ஆகும். அதில் ஆண்கள் 11,412 மற்றும் பெண்கள் 7,474 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1797 (9.51%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 95.21% ஆகவுள்ளது. மக்கள் தொகை இந்துக்கள் 85.11%, இசுலாமியர் 9.22%, கிறித்தவர்கள் 5.09% மற்றும் பிறர் 0.59% ஆகவுள்ளனர்.[3]
தட்ப வெப்பம்
தொகுடிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதகங்ளில் இராணிகேத் நகரத்தில் பனி மழை பொழியும். கோடைகாலத்தில் வெயில் அடித்தாலும் இதமாக இருக்கும்.
கல்வி நிறுவனங்கள்
தொகுராணிகேத் நகரத்தில் 10 தொடக்கப்பள்ளிகளும், 6 நடுநிலைப்பள்ளிகளும், 4 உயர்நிலைப்பள்ளிகளும், 6 மேனிலைப்ப்பள்ளிகளும் உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Ranikhet | Uttarakhand Tourism Development Board | Department of Tourism, Government Of Uttarakhand, India". | Uttarakhand Tourism Development Board | Department of Tourism, Government Of Uttarakhand, India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
- ↑ "Census of India 2011" (PDF). Census of India, 2011. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Ranikhet Population Census 2011
- ↑ "Census of India, 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link)