சத்தீஷ் சந்திரா

இந்திய வரலாற்று ஆசிரியர்

சதீஷ் சந்திரா (Satish Chandra, 20 நவம்பர் 1922 - 13 அக்டோபர் 2017) [1] என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இவருடைய முக்கியப் பங்களிப்பாக இடைக்கால இந்திய வரலாறு இருந்தது. [2]

சத்தீஷ் சந்திரா
2016இல் சத்தீஷ் சந்திரா
பிறப்பு(1922-11-20)20 நவம்பர் 1922
மீரட், உத்தரப் பிரதேசம்
இறப்பு13 அக்டோபர் 2017(2017-10-13) (அகவை 94)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் பல்கலைக்கழகம்
பணிவரலாற்று ஆசிரியர்
அறியப்படுவதுஇடைக்கால இந்திய வரலாறு குறித்த நூல்கள் எழுதியமைக்காக

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சதீஷ் சந்திரா, உத்தரபிரதேசத்தின் மீரட்டில் (அப்போதய ஐக்கிய மாகாணம் ) பிறந்தார். இவரது பெற்றோர் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக இருந்த சர் சீதா ராம் [3] மற்றும் அவரது மனைவி பாசுதேவி ஆகியோராவர்.

இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு இவர் இளங்கலை (1942), முதுகலை (1944) படிப்பை முடித்தார். ஆர். பி. திரிபாதியை நெறியாளராக கொண்டு மெய்யியலில் முனைவர் (1948) ஆய்வுப் படிப்பை முடித்தார். [4] [5] இவரது முனைவர் பட்ட ஆய்வேடு 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கட்சிகள் மற்றும் அரசியல் பற்றியது. [3]

இவர் சாவித்திரியை மணந்தார். மூன்று மகன்கள் இருந்தனர். [6]

தொழில் தொகு

இவர் அலகாபாத் பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். 1971 இல் கேம்பிரிட்ஜில் ஸ்மட்ஸ் வருகைதரு பேராசிரியராக இருந்தார். புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார். [7] எஸ். கோபால், பிபன் சந்திரா மற்றும் ரூமிலா தாப்பர் ஆகியோருடன் இணைந்து, ஜேஎன்யுவில் உள்ள சமூக அறிவியல் பள்ளியில் வரலாற்று ஆய்வு மையத்தை நிறுவினார். சில ஆண்டுகள் மையத்தின் தலைவராக இருந்தார். இந்திய வரலாற்றுப் பேராயத்தின் செயலாளராகவும் தலைவராகவும் இருந்தார்.

1970களில் இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவராகவும் தலைவராகவும் பணியாற்றினார். [7] இவர் 1980 மற்றும் 1986 க்கு இடையில் டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக கவுன்சிலில் பணியாற்றினார். இவர் மேசோன் டேஸ் சயின்சிஸ் டி எனோவில் ஆராய்ச்சி இயக்குநராகவும், பாரிசில் உள்ள சர்வதேச வரலாற்று அறிவியல் பேராயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். 1988 ஆம் ஆண்டில், உயர் குடிமைப்பணிகளின் நியமன முறையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு குழுவின் தலைவராக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இவர் கேட்கப்பட்டார்.

ஆய்வும், கருத்தியலும் தொகு

சந்திரா முகலாயர் காலம் குறித்த இந்தியாவின் முன்னணி வரலாற்று அறிஞர்களில் ஒருவராகவும். இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க வரலாற்றாசிரியர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார். [8] இவரது புத்தகமான, இடைக்கால இந்தியா, இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடநூலாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [8] [7]

இவர் சில சமயங்களில் "இடது சார்பு" என்று குறிப்பிடப்படும் ரொமிலா தாப்பர், ஆர். எஸ். சர்மா, பிபன் சந்திரா, அர்ஜுன் தேவ் ஆகிய வரலாற்றாசிரியர்களின் குழுவைச் சேர்ந்தவராக கருதப்புடுகிறார். [9] 2004 ஆம் ஆண்டில், இவரது பாடநூல் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேசிய பாடத்திட்டத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் தொகு

எழுதிய புத்தகங்கள்
பதிப்பாசிரியராக

குறிப்புகள் தொகு

  1. "Historian Satish Chandra passes away". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/historian-satish-chandra-passes-away/articleshow/61071836.cms. பார்த்த நாள்: 13 October 2017. 
  2. "Targeting history". Frontline இம் மூலத்தில் இருந்து 4 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080504042106/http://www.hinduonnet.com/fline/fl1809/18090880.htm. பார்த்த நாள்: 21 March 2009. 
  3. 3.0 3.1 Batabyal, Rakesh (in en). Prof Satish Chandra: Historian and academic ambassador. National Herald. https://www.nationalheraldindia.com/obituary/prof-satish-chandra-historian-and-academic-ambassador. 
  4. (in en) Who's who in India. Guide Publications.. 1986. பக். 81. https://books.google.com/books?id=eoNmAAAAMAAJ&q=%22Chandra,+Satish%22+1922. 
  5. (in en) Who's Who, Indian Personages. Crystal Ship Pub.. 1986. பக். 60. https://books.google.com/books?id=nLYZAAAAYAAJ. 
  6. (in en) India Who's who. INFA Publications.. 1990. பக். 470. https://books.google.com/books?id=aLAZAAAAYAAJ. 
  7. 7.0 7.1 7.2 Chandra, Satish (13 February 2002). "Guru Tegh Bahadur's Martyrdom". Outlook. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
  8. 8.0 8.1 Avril, Powell (October 1995). "Reviews: Satish Chandra: Mughal religious policies: the Rajputs and the Deccan". Bulletin of the School of Oriental and African Studies (School of Oriental and African Studies, University of London) 58 (3): 582. doi:10.1017/S0041977X0001332X. http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=3667792. பார்த்த நாள்: 6 March 2016. 
  9. Guichard, Sylvie (2010), The Construction of History and Nationalism in India, Routledge, p. 87, ISBN 978-1136949319
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீஷ்_சந்திரா&oldid=3871299" இலிருந்து மீள்விக்கப்பட்டது