சத்துருக்கனன் கோயில்

(சத்துருக்கன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சத்துருக்கனன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் சத்துருக்கனுக்கு உள்ள கோயில். இது பாயம்மல் என்ற இடத்தில் உள்ளது. சத்துருக்கனுக்கென்றே உள்ள மிகச் சில கோயில்களுள் இதுவும் ஒன்று.

இராம சகோதரர்கள் நால்வருக்கும் கேரளத்தில் தனித் தனிக் கோயில்கள் உள்ளன. இவை நாலம்பலம் (நான்கு+அம்பலம், அம்பலம்=கோயில்) என அழைக்கப்படுகின்றன.