சத்நாமிகள்

சத்நாமிகள் (Satnampanth, also called Satnami Samaj, Satnami movement) என்பவர்கள் வட இந்தியாவில் குரு ரவிதாசரை பின்பற்றும் தலித் மக்கள் ஆவர். சத்நாமி சம்பிரதாயத்தை, ரவிதாசரின் சீடரான பீர் பான் (1543-1620) என்பவர் தற்போதைய அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்திலுள்ள நர்னௌல் நகரத்தில் நிறுவினார்.சத்நாமிகளின் மூன்று பண்புகள்: பக்தருக்கான ஆடையை அணிதல்; நியாயமான வழிகளின் பொருள் ஈட்ட வேண்டும் மற்றும் எந்த வகையான அநீதியையும் அட்டூழியத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடாது.[1]குரு ரவிதாசருக்கு அடுத்து சத்நாமிகள் இரண்டாவதாக கொண்டாடப்படுவர் ஜெகசீவன் தாஸ் ஆவார். இவர் மொகலாயப் பேரரசர் அக்பர் காலத்தவர் ஆவார்.[2] சத்நாமிகள் இயக்கம் 21 ஏப்ரல் 1657 அன்று அலுவல் ரீதியாக அபா சிங் என்பவரால் நிறுவப்பட்டது.[3]இவ்வியக்கத்தினர் தங்கள் பெயருக்குப் பின்னால் சத்நாமி என்று இட்டுக் கொள்வார்கள். இம்மரபினர் தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்வர்.

1672 சத்நாமிகள் கிளர்ச்சி

தொகு

முகலாய மாமன்னர் அவுரங்கசீப் முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரியை விதித்த காரணத்தாலும், இந்து கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் இடித்த காரணத்தினாலும் சத்நாமிகள் அவுரங்கசீப்பிற்கு எதிராக 1672ல் பெருங்கிளர்ச்சி செய்தனர். ஒரு முகலாய படைவீரன் ஒரு சத்நாமியை கொன்றதால் இக்கிளர்ச்சிக்கு காரணமாயிற்று. இதனால் முகலாய படையினர் சத்நாமிகள் மீது அடக்குமுறை கையாண்டனர். இதன் காரணாமாக 5,000 சத்நாமிகள் ஆயுதம் ஏந்தி முகலாய நிர்வாகத்திற்கு எதிராக செய்த கிளர்ச்சியில் பல மசூதிகள் இடிக்கப்பட்டது. இதனால் கோபம் கொண்ட அவுரங்கசீப் தலைமையில் 10,000 படைவீரர்கள் சத்நாமிகளுக்கு எதிராக களத்தில் இறங்கியது. இந்த கிளர்ச்சியில் 2,000 சத்நாமிகள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது. இதனால் மீதமிருந்த சத்நாமிகள் தங்கள் தலைவர் மற்றும் அமைப்பு இன்றி வாழ்ந்தனர்.[4][5][6]

புத்துயிர் பெறுதல் மற்றும் பிரச்சாரம்

தொகு

1714ல் சத்நாமி மரபு மீண்டும் புத்துயிர் பெற்றது.[7]ஜெகசீவன் தாஸ் தலைமியில் சத்நாமி மரபு இரண்டாம் முறையாக மறுமலர்ச்சி பெற்றது. மூன்றாம் மறுமலர்ச்சி காசிதாஸ் தலைமையில் மறுமலர்ச்சி பெற்றது. தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தில், சத்நாமிகளின் அமைப்பின் தலைமையிடம் 1780ல் நிறுவப்பட்டது.

வழிபாட்டு முறை

தொகு

சத்நாமிகள் வழிபாட்டின் போது மூன்று முறை சத்நாம் என உச்சரிப்பார்கள்.மேலும் சத்நாமிகள் இராமர் மற்றும் அனுமரை வழிபடுவார்கள். மேலும் நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.[8]

சின்னம்

தொகு

சத்நாமிகள் முன் நெற்றியில் சாம்பாலால் நேர் கோடு இட்டுக்கொள்வார்கள். இந்த நேர்கோடு அனுமானுக்கான பிரசாதம் ஆகும். .

மேற்கோள்கள்

தொகு
  1. Haryana Review: Volume 11 By Haryana Public Relations Department
  2. P. 112 Growth of Scheduled Tribes and Castes in Medieval India By Kishori Saran Lal
  3. SATNAMIS OR SADHS: CHANGING IDENTITY OF THE SATNAMIS OF NARNAUL
  4. Edwardes, Stephen Meredyth; Garrett, Herbert Leonard Offley (1995). Mughal Rule in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Dist. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-551-1.
  5. "General Knowledge Miscellanea". Pratiyogita Darpan (in ஆங்கிலம்). September 2007.
  6. Singh, Mahendra (2006). Dalit's Inheritance in Hindu Religion (in ஆங்கிலம்). Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-517-7.
  7. P. 146 Ernest Trumpp and W.H. McLeod as Scholars of Sikh History Religion and Culture By Trilochan Singh
  8. P. 129 Organizational and Institutional Aspects of Indian Religious Movements By Joseph T. O'Connell

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்நாமிகள்&oldid=4024843" இலிருந்து மீள்விக்கப்பட்டது