சத்பாய் வனவிலங்கு சரணாலயம்
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் (Chadpai Wildlife Sanctuary) வங்காளதேசத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு பூங்காவாகும். 560 எக்டேர் (1400 ஏக்கர்) பரப்பளவில்[1] பேகர்காட் மாவட்டத்தின் கீழுள்ள மோங்லா துணை மாவட்டத்தில் சத்பாய் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதியன்று வங்காளதேச அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக சத்பாய் வனவிலங்கு சரணாலயம் ஒரு வனவிலங்கு சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.[2]
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் Chadpai Wildlife Sanctuary | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | பேகர்காட்டு, குல்னா, வங்காளதேசம் |
ஆள்கூறுகள் | 22°22′54″N 89°39′23″E / 22.381607°N 89.656354°E |
பரப்பளவு | 560 ha (1,400 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | சனவரி 29, 2012 |
2012 ஆம் ஆண்டு வங்காளதேச அரசாங்கத்தின் கழுகு பாதுகாப்பு மண்டலம்-2 அட்டவணையின்படி இச்சரணலாயம் கழுகுகளுக்கான பாதுகாப்பான மண்டலங்களில் ஒன்றாகும்.[3] சத்பாய் சதுப்பு நிலம் வங்காளதேசத்தில் உள்ள டால்பின் சரணாலயங்களில் ஒன்றாகும்.[4][5]
9 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று ஓ.டி சதர்ன் இசுடார் 7 என்ற கொள்கலன் வாகனம் 357,000 லிட்டர் உலை எண்ணெயை ஏற்றிச் சென்றது. மற்றொரு கப்பலுடன் ஏற்பட்ட மோதலால் சுந்தரவனத்தின் கிழக்கு மண்டலத்தின் கீழுள்ள சத்பாய் வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பில் எண்ணெய் கொட்டியது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wildlife Sanctuaries". Strengthening Regional Cooperation for Wildlife Protection Project. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Wildlife Sanctuary". Forest Department (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
- ↑ "Vulture Safe Zone". bforest.gov.bd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ Ethirajan, Anbarasan (31 October 2011). "Bangladesh bid to save dolphins". BBC News. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.
- ↑ "সুন্দরবনে বাড়ছে ডলফিনের অভয়ারণ্য". jagonews24.com. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.
- ↑ "UN for ban on movement of vessels thru' Sundarbans". www.observerbd.com. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.
- ↑ WilkinsonDec. 19, Allie (16 December 2014). "Officials scramble to respond to Bangladesh oil spill". Science (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)