சந்தியாகோ லாங்கே
சந்தியாகோ லாங்கே (Santiago Lange, பிறப்பு: 21 செப்டம்பர் 1961), அர்கெந்தீனாவைச் சேர்ந்த கப்பல் வடிவமைப்பாளர் ஆவார். இவர் ஒலிம்பிக் பாய்மரப் படகோட்டங்களில் கலந்து கொண்டு இரு முறை வெண்கலப் பதக்கங்களும் ஒரு முறை தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.[1] தனது ஆறாவது வயதில் பாய்மரப் படகேற்றத்தைத் துவங்கிய சந்தியாகோ, பதின்மூன்றாம் வயதில் பன்னாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.[2] தனது 59வது வயதில் சந்தியாகோவும் செசீலியா கரான்சா என்ற பெண் பாய்மரப் படகோட்ட வீரரும் இணைந்து பங்கேற்று 2021 டோக்கியோ ஒலிம்பிக் நாக்ரா 17 ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பெற்றனர்.[3]
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 22 செப்டம்பர் 1961 சான் இசிட்ரோ, அர்கெந்தீனா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Sailing career | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Club | நவுடிக்கோ சான் இசிட்ரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
புற்றுநோய் பாதிப்புதொகு
2014ஆம் ஆண்டில் அடிக்கடி நோய்வாய்ப்பட்ட சந்தியாகோ, நுரையீரல் புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளது தெரிய வந்தது. மருத்துவ ஆலோசனைப்படி, அவர் பார்செலோனாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்; அதில், நுரையீரலில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு முழு வீச்சில் பயிற்சி மேற்கொள்வதில் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.[3]
ரியோ ஒலிம்பிக் போட்டிதொகு
'அறுவை சிகிச்சை முடிந்து ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்குவதற்கு இடையிலிருந்த ஒன்பது மாதங்களே என் வாழ்க்கையில் நான் மிகுந்த முயற்சியை மேற்கோண்ட நாட்கள்' என்று சந்தியாகோ பிறகு குறிப்பிட்டுள்ளார். சந்தியாகோவும் செசீலியாவும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் நாக்ரா17 ஓட்டத்தில் கலந்து கொண்டு துவக்கப் போட்டிகளில் முதலிடம் பிடித்தனர்; ஆனால், இறுதி ஓட்டத்தில் இருமுறை தவறிழைத்து பின்வரிசைக்குத் தள்ளப்பட்ட இவ்விருவரும், மிகுந்த முயற்சியினாலும் அவர்கள் அமைத்த வியூகங்களினாலும் முதலிடத்தைப் பிடித்து ஒலிம்பிக் தங்கம் வென்றனர்.[3]
மேற்கோள்கள்தொகு
- ↑ "redbull". 3 ஆகத்து 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "World Sailing -- Santiago Lange". 3 ஆகத்து 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 ஆகத்து 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 "olympics.com". 3 ஆகத்து 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 ஆகத்து 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- official website பரணிடப்பட்டது 2021-07-13 at the வந்தவழி இயந்திரம்