சந்தியா பௌரி
சந்தியா பௌரி(Sandhya Bauri) (பிறப்பு: செப்டம்பர் 2, 1951) ஓர் அரசியல்வாதியும், சமூக சேவகரும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் விஷ்ணுபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.[1]
சந்தியா பௌரி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1996-2004 | |
தொகுதி | விஷ்ணுபூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 2 செப்டம்பர் 1951 |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | நிமாய் சரண் பௌரி |
தொழில் | அரசியல்வாதி, சமூகப்பணி, வேளாண்மை நிபுணர் |
ஆரம்ப கால வாழ்க்கைதொகு
சந்தியா, செப்டம்பர் 2, 1951 அன்று பாங்குரா மாவட்டம் (மேற்கு வங்காளம்) கத்ராவில் பிறந்தார். இவர் பிப்ரவரி 28, 1972 அன்று நிமாய் சரண் பௌரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவரது மகள்களில் ஒருவரான சுஷ்மிதா பௌவுரியும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
கல்வியும் தொழிலும்தொகு
- மேற்கு வங்காளத்தின் பங்குரா கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
- இவர் முதன்முதலில் 1996 இல் பதினோராவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 முதல் 1997 வரை பதவியிலிருந்தார்.
- உணவு, வழங்கல் மற்றும் பொது விநியோகக் குழு உறுப்பினாரக இருந்தார்.
- பெண்கள் வலுவூட்டல் குழு உறுப்பினர்.
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, நல அமைச்சகம்[1]
- இவர் 1999 இல் மூன்றாவது முறையாக பதின்மூன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-2004 ஆம் ஆண்டில், பதவியிலிருந்தார்.
- உறுப்பினர், தொழிலாளர் மற்றும் நலன்புரி குழு
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, துணி அமைச்சகம்[1]
சிறப்பு ஆர்வங்களும் சமூக நடவடிக்கைகளும்தொகு
இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, தாழ்த்தப்பட்ட மற்றும் பலவீனமான பிரிவினரின் மேம்பாட்டுக்காக பணியாற்றியுள்ளார். இவர் குழந்தைகளுக்கான நாடகங்களையும் ஏற்பாடு செய்துள்ளார். ஓய்வு நேரத்தில் வாசிப்பது, எழுதுவது மற்றும் விளையாடுவதை விரும்புகிறார். கேரம் மேசைப் பந்தாட்டம், போன்ற உட்புற விளையாட்டுகளையும் விளையாடுகிறார்.[1]