சுஷ்மிதா பௌரி

இந்திய அரசியல்வாதி

சுஷ்மிதா பௌரி (Susmita Bauri) (பிறப்பு ஜனவரி 1975 5) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினான்காவது மக்களவைக்கும், பதினைந்தாவது மக்களவைக்கும் தேர்தெடுக்கப்பட்டார்.[1]

சுஷ்மிதா பௌரி
பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்.
பதவியில்
2004-2014
முன்னையவர்சந்தியா பௌரி
பின்னவர்சௌமித்ரா கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1975 (1975-01-05) (அகவை 49)
காத்ரா, பாங்குரா மாவட்டம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்குருச்சரண் பட்டாச்சார்யா
வாழிடம்பாங்குரா
தொழில்வழக்கறிஞர்

நிமாய் சரண் பௌரி - சந்தியா பௌரி தம்பதியின் மகளான இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஹஜ்ரா சட்டக் கல்லூரியிலிருந்து சட்டம் பயின்றார். ஒரு வழக்கறிஞராக இவர் ஏழை மக்களுக்கு, குறிப்பாக படிப்பறிவற்ற பெண்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குகிறார்.[2] பௌரி சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் சந்தியா பௌரி, அதே தொகுதியில் மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்தார்.[3]

பதினான்காவது மக்களவையில் இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவிலும், ஆற்றல் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். பதினைந்தாவது மக்களவையில் இவர் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் குழுவிலும், அவையில் உறுப்பினர்கள் இல்லாதிருப்பதற்கான குழு உறுப்பினராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Susmita Bauri -Political Profile". Archived from the original on 21 October 2010.
  2. "Detailed Profile: Smt. Susmita Bauri". Government of India. பார்க்கப்பட்ட நாள் 2010-10-17.
  3. "CPM goes for kill with axe on losers". The Telegraph, 7 February 2004. பார்க்கப்பட்ட நாள் 2010-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மிதா_பௌரி&oldid=3793874" இலிருந்து மீள்விக்கப்பட்டது