சந்திரசேகர மூர்த்தி

(சந்திரசேகரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
சந்திரசேகரர்

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: சந்திரனை தலையில்
சூடிய சிவபெருமான்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சைவ சமயத்தில் சந்திரசேகரர் எனப்படுபவர் சிவனின் மகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றாகும். சந்திரனைத் தலையிற் தரித்த கோலம் இதுவாகும்.

சொல்லிலக்கணம்

தொகு

சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது எனக்கொள்ளலாம். [சான்று தேவை]

வேறு பெயர்கள்

தொகு
  • பிறையோன்
  • பிறை சூடிய பெம்மான்
  • பிறைசூடன்
  • தூவெண்மதிசூடி
  • பிறையன்
  • மதிசெஞ்சடையோன்
  • இந்து சேகரன் - இந்து என்பது சந்திரனின் மற்றொருப் பெயர்
  • மதனசேகரன் - மதனன் என்றாலும் சந்திரனை குறிக்கும் மற்றொரு பெயர்.
  • பிறைசூடி
  • மாமதிசூடி

தோற்றம்

தொகு

பிறை அணிந்திருக்கும் சிவபெருமானின் வடிவம்.

வகைகள்

தொகு

சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.

  1. கேவல சந்திரசேகர் - கேவல என்றால் தனித்த நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி, தனித்து நிற்கிறார்.
  2. உமா சந்திரசேகர் - இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.
  3. ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலையில் இருக்கிறார்.

உருவக் காரணம்

தொகு

சந்திரன் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தான். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்ததாக புராணங்களில் காணலாம்.

தன் சாபம் நீங்க ஈசனை வழிபட்டான் சந்திரன். அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை தோன்றிய போது இறைவனே அவன் மீது இரக்கங் கொண்டு அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், 'சந்திரசேகரர்' என்ற பெயர் பெற்றார் ஈசன்.

கோயில்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர_மூர்த்தி&oldid=3641517" இலிருந்து மீள்விக்கப்பட்டது