சந்திரம சாந்தா

சந்திரமா சந்தா (Chandrama Santha-5 மே 1938-25 சூன் 2021) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980 முதல் 1990 வரை ஒரிசா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் பொட்டங்கி தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சந்திரம சாந்தா
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1990
முன்னையவர்ஜயராம் பாங்கி
பின்னவர்ஜயராம் பாங்கி
தொகுதிபொட்டாங்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-05-05)5 மே 1938
இறப்பு21 சூன் 2021(2021-06-21) (அகவை 83)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ଓଡ଼ିଆ (or)

வாழ்க்கை வரலாறு தொகு

சந்திரமா சந்தா 1938 மே 5 அன்று பிறந்தார். இவரது கணவர் மாலு சந்தா 1950 மற்றும் 1960களில் ஒடிசா சட்டமன்றத்தில் பணியாற்றினார். விவசாயியான சந்தா பகுதி நேர சமூக சேவகராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர் நிலக்கொடை இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். பல உள்ளாட்சி மற்றும் கட்சி பதவிகளை வகித்த சந்தா, பொட்டங்கியின் பஞ்சாயத்துச் சமிதி அகில இந்திய மகளிர் காங்கிரசின் கோராபுட் கிளையின் தலைவராகவும், ஒடிசா பிரதேச காங்கிரசு கட்சியின் மகளிர் குழுவின் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1][2]

1980 தேர்தலில், ஒடிசா சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட சந்தா, போட்டங்கி தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஜனதா கட்சி ஜெயராம் பாங்கியைத் தோற்கடித்தார்.1985 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை பாங்கியை 44% வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சட்டமன்றத்தில் சாந்தா உள்ளூர் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தார். இவரது முதன்மை குறிக்கோள்களில் "ஆதிவாசி மற்றும் தலித் பெண்களின் மேம்பாடு", வரதட்சணை தடை மற்றும் கல்வியறிவை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[1][3]

தொடர்ந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, சந்தா உள்ளூர் அரசியலில் தீவிரமாக இருந்தார். 2002 முதல் 2007 வரை கோராபுட் மாவட்டத்தின் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றினார்.

இறப்பு தொகு

சந்தா தனது 83 வயதில் 2021 சூன் 25 அன்று நோயால் இறந்தார்.[1][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Late Chandrama Santha". Odisha Legislative Assembly. Archived from the original on April 1, 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
  2. "Late Malu Santha". Odisha Legislative Assembly. Archived from the original on 2022-12-08. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. "Pottangi (ST) Assembly Constituency". Election Commission of India. Archived from the original on 2014-03-24. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
  4. "Odisha CM,Mourns Death of Firs Tribal Lady Pottangi's Former MLA Chandrama Saunta". Odisha Barta (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-27. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரம_சாந்தா&oldid=3908507" இலிருந்து மீள்விக்கப்பட்டது