கோராபுட்
கோராபுட் (Koraput) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத் தலைமையிட நகரமும், நகராட்சி மன்றமும் ஆகும்.
கோராபுட் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): இந்தியாவின் வானூர்தி இயந்திரத் தலைநகர்[1] | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோராபுட் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°51′22″N 82°44′05″E / 18.8561°N 82.7347°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கோராபுட் மாவட்டம் |
ஏற்றம் | 870 m (2,850 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 47,468 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764020 |
வாகனப் பதிவு | OD 10 |
இணையதளம் | odisha |
சுற்றுலாத் தலமான கோராபுட் நகரத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் கொண்ட தேவ்மாலி மலைத்தொடர்களும், குப்தேஷ்வர் குகைகளும், தூத்மா அருவியும் உள்ளது.
கோராபுட் நகரம் விசாகப்பட்டினத்திலிருந்து 214 கிமீ தொலைவிலும்; புவனேஸ்வரிலிருந்து 504 கிமீ தொலைவிலும் உள்ளது.
பழங்குடிகள்
தொகுஇந்தியாவின் பழங்குடிகள் வளையத்தின் ஒரு பகுதியாக தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் விளங்குகிறது.
கோராபுட் நகரம் தொழில்மயமாதல், நகர்மயதால் விளைவாக காடுகள் அழிக்கப்படுவதால், இப்பகுதி வாழ் பழங்குடி மக்களின் பண்பாடு, நாகரீகம், தொழில் முறைகள் பெரிதும் மாறிவருகிறது.[2] கோராபுட் ஜெகன்நாதர் கோயில் தலத்தை சபர சிறீ சேத்திரம் என்றழைப்பர்.
புவியியல்
தொகு18°49′N 82°43′E / 18.82°N 82.72°E பாகையில் கோராபுட் நகரம் அமைந்துள்ளது.[3]கோராபுட் கடல் மட்டத்திலிருந்து 870 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வம்சதாரா ஆறு, மேச்சகுந்தா ஆறு மற்றும் கோலப் ஆறுகள் கோராபுட் நகரத்திலும், சுற்றிலும் பாய்கிறது. நகரத்தைச் சுற்றியிலுள்ள சந்திரகிரி மற்றும் தேவ்மாலி மலைகளில் தூத்மா, பக்ரா மற்றும் கண்டஹத்தி அருவிகள் நீரைக் கொட்டுகிறது. 8807 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோரபுட் நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 47,468 ஆகும்.[4]
பொருளாதாரம்
தொகுகோராபுட் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுனபேடாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மிக் மற்றும் சுகோய் போர் வானூர்திகளின் மோட்டார் இயந்திரங்களை தயாரிக்கிறது.
கோராபுட் நகரத்தை ஒட்டியுள்ள தமஞ்சோடியில் தேசிய அலுமினியம் நிறுவனத்தின் (NALCO) சுரங்கங்கள் உள்ளது.
போக்குவரத்து
தொகுதொடருந்து வசதிகள்
தொகுகோராபுட் நகரத்தின் தொடருந்து நிலையம், புவனேஸ்வர், புரி, கட்டக், ஜெகதல்பூர், ராய்ப்பூர், ரூர்கேலா, ஹவுரா, விஜயநகரம் மற்றும் விஜயவாடா நகரங்களை இருப்புப் பாதை மூலம் இணைக்கிறது. [5]
சாலை வசதி
தொகுராய்ப்பூரையும், விசாகப்பட்டினத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 26 (43) கோராபுட் நகரத்தின் வழியாக செல்கிறது. விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்திலிருந்து ஜெய்ப்பூர், உமர்கோட், ஜெகதல்பூர் வழியாக செல்லும் பேருந்துகள் கோராபுட் வழியாக செல்கிறது.
கல்வி
தொகு- ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், கோராபுட்
- எஸ் எல் என் மருத்துவக் கல்லூரி
- சித்தார்த் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி
- வானூர்தி பொறியியல் கல்லூரி
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், கோராபுட், ஒடிசா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 25.3 (77.5) |
28.4 (83.1) |
31.7 (89.1) |
33.6 (92.5) |
34.3 (93.7) |
30.6 (87.1) |
25.9 (78.6) |
25.6 (78.1) |
26.6 (79.9) |
27.0 (80.6) |
25.7 (78.3) |
24.7 (76.5) |
28.28 (82.91) |
தாழ் சராசரி °C (°F) | 12.0 (53.6) |
14.4 (57.9) |
17.7 (63.9) |
20.9 (69.6) |
22.9 (73.2) |
22.5 (72.5) |
20.7 (69.3) |
20.4 (68.7) |
20.3 (68.5) |
18.7 (65.7) |
14.1 (57.4) |
11.5 (52.7) |
18.01 (64.42) |
மழைப்பொழிவுmm (inches) | 8 (0.31) |
3 (0.12) |
19 (0.75) |
53 (2.09) |
84 (3.31) |
213 (8.39) |
437 (17.2) |
391 (15.39) |
247 (9.72) |
116 (4.57) |
27 (1.06) |
6 (0.24) |
1,604 (63.15) |
ஆதாரம்: en.climate-data.org |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://odishatv.in/odisha/otherstories/koraput-to-be-nurtured-as-aero-engine-capital-of-india-raha-61584/
- ↑ Resource: Book on the ethnobotany of the Kondh, Poraja, Gadaba and Bonda of the Koraput region of Odisha, India « Traditional Knowledge Bulletin. Tkbulletin.wordpress.com (2012-01-18). Retrieved on 2013-02-09.
- ↑ Falling Rain Genomics, Inc. - Koraput. Fallingrain.com. Retrieved on 2013-02-09.
- ↑ Koraput Population Census 2011
- ↑ Koraput Railway Station
- Koraput Parikrama, (Prabandha Samkalan), Published by Banaphula Sahitya Parishad, Sunabeda and edited by Dr. Basanta Kishore Sahoo
- Smaranika-2013 (Koraput Bisesanka), Published by Utkal Sanskrutika Parishad, Sunabeda and also edited by Dr. Basanta Kishore Sahoo
வெளி இணைப்புகள்
தொகு- Deomali – The highest & largest mountain peak of Odisha
- Official GIS Maps of Koraput District பரணிடப்பட்டது 2013-08-20 at the வந்தவழி இயந்திரம்
- Road Map of Koraput District
- Official website of Koraput district
- Check More about Beauty of Koraput
- Koraput district map
- Koraput district info பரணிடப்பட்டது 2009-05-03 at the வந்தவழி இயந்திரம்
- Koraput district information பரணிடப்பட்டது 2008-12-04 at the வந்தவழி இயந்திரம்
- Central University of Orissa
- Koraput village sets hygiene example பரணிடப்பட்டது 2013-06-29 at Archive.today
- Koraput Tourism பரணிடப்பட்டது 2018-03-07 at the வந்தவழி இயந்திரம்