சந்திர மோகன் ராய்

இந்திய அரசியல்வாதி

சந்திர மோகன் ராய் (Chandra Mohan Rai) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி தலைவரான இவர் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1] ராய் 1967ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலில் ஜனசங்கம் சார்பில் போட்டியிட்டார். பின்னர் 1977ஆம் ஆண்டில் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு அர்ஜுன் விக்ரம் சாவிடம் தோல்வியடைந்தார். ராய் 1990-இல் பாஜக சார்பில் போட்டியிட்டு ராம்நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2000 மற்றும் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ராம் நகர் தொகுதியிலிருந்தும் 2010ஆம் ஆண்டு சன்படியா சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான முதல் மற்றும் இரண்டாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் ராய் அமைச்சராகப் பணியாற்றிய பின்னர் 2015 முதல் தீவிர அரசியலிலிருந்து விலகினார்.

சந்திர மோகன் ராய்
அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
26 நவம்பர் 2010 – 16 சூன் 2013
அமைச்சரவை
காலம்
பொதுச் சுகாதார பொறியியல் துறை அமைச்சர்26 நவம்பர் 2010 - 16 சூன் 2013
பதவியில்
24 நவம்பர் 2005 – 13 ஏப்ரல் 2008
அமைச்சரவை
காலம்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்24 நவம்பர் 2005 - 13 ஏப்ரல் 2008
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2010–2015
முன்னையவர்சதீசு சந்திர துபே
பின்னவர்பிரகாசு இராய்
தொகுதிசன்படியா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2000–2010
முன்னையவர்இராம் பிரசாத் யாதவ்
பின்னவர்பாகிரதி தேவி
தொகுதிராம் நகர் சட்டமன்றத் தொகுதி (பீகார்)
பதவியில்
1990–1995
முன்னையவர்அர்ஜூன் விக்ரம் சாகா
பின்னவர்இராம் பிரசாத் யாதவ்
தொகுதிராம் நகர் சட்டமன்றத் தொகுதி (பீகார்)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "CHANDRA MOHAN RAI (Bharatiya Janata Party(BJP)):Constituency- Ramnagar (West Champaran ) - Affidavit Information of Candidate".

2. http://www.travelindia-guide.com/assembly-elections/bihar/constituency-results/ramnagar.php பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_மோகன்_ராய்&oldid=3986172" இலிருந்து மீள்விக்கப்பட்டது