சந்து கபீர் நகர் மாவட்டம்
சந்து கபீர் நகர் மாவட்டம் (Sant Kabir Nagar district) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் எழுபது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கலீலாபாத் ஆகும். உத்தரப் பிரதேசத்தின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டம் பஸ்தி கோட்டத்தில் உள்ளது.
சந்து கபீர் நகர் மாவட்டம் संत कबीर नगर जिला | |
---|---|
சந்து கபீர் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பஸ்தி |
தலைமையகம் | கலிலாபாத் |
பரப்பு | 1,646 km2 (636 sq mi) |
மக்கட்தொகை | 1,715,183 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,042/km2 (2,700/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 7.49% |
படிப்பறிவு | 66.72% |
பாலின விகிதம் | 972 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் கலீலாபாத், மேத்தாவாலா, காங்கட்டா என மூன்று வருவாய் வட்டங்களும், சாந்தா, மெந்தவாலா, பெல்ஹர் காலா, செமரியாவான், பகௌலி, கலீலாபாத், நாத் நகர், ஹெயின்சர் பஜார், பௌலி என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தொகுஇம்மாவட்டம் மேத்தாவாலா, காங்கட்டா, கலீலாபாத் என மூன்று சட்டமன்ற தொகுதிகளையும்; சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
தொகுஇந்தியாவில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாக 2006-இல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி செய்கிறது.[1]
மக்கள் தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,715,183 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 92.50% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 7.49% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.77% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 869,656 ஆண்களும் மற்றும் 845,527 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 1,646 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,042 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.72% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.39% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.80% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 283,912 ஆக உள்ளது. [2]
சமயம்
தொகுஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,300,586 (75.83 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 404,410 (23.58 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்
தொகுமாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
புகழ் பெற்றவர்கள்
தொகு- கபீர், கவிஞர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Sant Kabir Nagar District : Census 2011 data
வெளி இணைப்புகள்
தொகு