சபர்மதி டிக்கி

சபர்மதி டிக்கி (பிறப்பு c. 1969 ) ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வருக்கு அருகில் வசிக்கும் இந்திய வளம்பேணும் விவசாயி ஆவார். அவர் தனது தந்தையுடன் சாம்பவ் என்ற அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது விதைகளை மாற்றமுறயும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் செயல்படுகிறது. டிக்கியின் சாதனைகள் 2018 இல் அவர் நாரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் 2020 இல் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றபோது அங்கீகரிக்கப்பட்டது.

President presents woman with award
சபர்மதி டிக்கி பத்மஸ்ரீ விருது பெறுகிறார்
Three women bending over to plant rice
நெல் வயலில் நெல் பதியும் முறையைப் பயிற்சி செய்யும் பெண்கள்

தொழில் தொகு

1969 ஆம் ஆண்டு டிக்கி பிறந்தார். [1] அவர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வர் அருகே உள்ள நயாகர் மாவட்டத்தில் வசிக்கிறார். [2] இவரது தந்தை ராதா மோகன்,1980களில் பாழ் நிலமாக இருந்த நிலத்தை வாங்கி, இயற்கை விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தினார். பிறகு தந்தையும் மகளும் இணைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தைப் புதுப்பித்தனர். பின்னர் அவர்கள் 90 ஏக்கர் பரப்பளவில் மற்றவற்றுடன், அவர்கள் கிராம்பு, பலா, பட்டாணி மற்றும் கருப்பு அரிசி ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இயற்கை விவசாயம் மற்றும் விதைப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் சாம்பவ் என்ற அரசு சாரா நிறுவனத்தை (என்ஜிஓ) இருவரும் இணைந்து அமைத்தனர். டிக்கி, 1993 இல் ஆக்ஸ்பாமில் தனது வேலையை விட்டுவிட்டு, சாம்பவ் நிறுவனத்திற்காக முழுநேரப் பணியில் ஏடுபடத் தொடங்கினார். [3]

2021இல், சாம்பவ் 500 விதை வகைகளை பாதுகாப்பதற்காக சேகரித்தது. இந்நிறுவனம் பயிற்சி நாட்களையும் வருடாந்திர விதை திருவிழாவையும் நடத்துகிறது. [4] உள்ளூர் கிராமங்களில் பெண்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களை மேம்படுத்துவதற்காக மா சரஸ்வதி என்ற சுயஉதவி குழுவுடன் சாம்பவ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. [5] இது நெல் விளைச்சலை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட அரிசி தீவிரப்படுத்தல் முறையை (SRI) ஊக்குவிக்கிறது. டிக்கியின் நெல் வயல்களில் பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பு செயல்முறையை எளிதாக்குவதற்காக இம்முறையைச் செயல்படுத்தியுள்ளார். [6]

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

டிக்கியின் பணி 2018 இல் பெண்களுக்கான இந்தியாவின் உயரிய சிவில் விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார். 2020 ஆம் ஆண்டில், அவர் தனது தந்தையுடன் இணைந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அவர்கள் பல தசாப்தங்களாக வளப்பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காக, பாடப்படாத நாயகர்கள் என்று அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார். [7]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. name="TBI"
  2. name="IJPA">Singh, Pushpa (December 2020). "Capturing the Narratives of Sustainable Farming: Study of Marginal Women Farmers in Five Districts of Odisha". Indian Journal of Public Administration 66 (4): 455–465. doi:10.1177/0019556120982199. 
  3. name="TBI"
  4. name="IJPA"Singh, Pushpa (December 2020). "Capturing the Narratives of Sustainable Farming: Study of Marginal Women Farmers in Five Districts of Odisha". Indian Journal of Public Administration 66 (4): 455–465. doi:10.1177/0019556120982199. Singh, Pushpa (December 2020). "Capturing the Narratives of Sustainable Farming: Study of Marginal Women Farmers in Five Districts of Odisha". Indian Journal of Public Administration. 66 (4): 455–465. doi:10.1177/0019556120982199.
  5. name="IJPA"
  6. name="KTV">"Odisha's Sabarmatee Tiki receives 'Nari Shakti Award'". KalingaTV. 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 June 2022.
  7. name="NDTV">"Padma Shri For Father-Daughter Who Transformed Wasteland Into A Forest". NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபர்மதி_டிக்கி&oldid=3799951" இலிருந்து மீள்விக்கப்பட்டது