சபஹார் துறைமுகம்
சபஹார் துறைமுகம் (Chabahar Port) (பாரசீக மொழி: بندر چابهار), ஈரான் தென்கிழக்கில் உள்ள சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணத்தில் உள்ள சபஹார் நகரத்தில் உள்ளது. இத்துறைமுகம் ஓமான் வளைகுடாவில் அமைந்த ஆழ்கடல் இயற்கை துறைமுகம் ஆகும். சபாஹார் துறைமுகம் சாகித் மௌசா காலந்தரி மற்றும் சாகித் முகமது பெஹஷ்டி என இரண்டு தனி துறைமுகங்களாக செயல்படுகிறது. ஓவ்வொன்றும் 5 தளங்கள் கொண்டது.[2] இது பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து மேற்கே 107 மைல் (172.2 கிலோ மீட்டர் அல்லது 92.98 கடல் மைல்) தொலைவில் உள்ளது.
சபஹார் துறைமுகம் بندر چابهار | |
---|---|
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | ஈரான் |
அமைவிடம் | சபஹார், சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம் |
ஆள்கூற்றுகள் | 25°18′01″N 60°36′46″E / 25.300278°N 60.612778°E |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | 1983 |
நிர்வகிப்பாளர் | இந்தியா[1] |
உரிமையாளர் | ஈரான் |
துறைமுகத்தின் அளவு | 480 ha (1,200 ஏக்கர்கள்) |
நிலப்பரப்பு | 440 ha (1,100 ஏக்கர்கள்) |
நிறுத்தற் தளங்கள் | 10 |
ஊழியர்கள் | 1,000 |
தலைமை இயக்குநர் | பெரௌஸ் அகாயி |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்னேஜ் | 2.1 மில்லியன் டன்கள் (2015) |
வலைத்தளம் chabaharport |
2016-ஆம் ஆண்டு முதல் சபாஹார் துறைமுகத்தை இந்தியா கையாள்வதுடன், அதன் வளர்ச்சிக்கும் பெரும் அளவில் உதவி செய்துவருகிறது.[3][4]
இந்தியாவிற்கு சபஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம்
தொகுஇந்தியாவிற்கும், ஆப்கானித்தானுக்கும் நேரடி வழியாக சபஹார் துறைமுகம் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் இந்திய சரக்கு வண்டிகளுக்கு பாகிஸ்தான் தனது நிலப்பரப்பை பயன்படுத்த மறுக்கிறது. எனவே சபஹார் துறைமுகம் மற்ற நாடுகளுடனான வர்த்தகத்திற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உதவுகிறது. எனவே ஆப்கானிய உள்நாட்டு அரசியலில் பாகிஸ்தானின் செல்வாக்கு குறையும். இது இந்தியாவிற்கு மூலோபாய ரீதியாகப் பயனளிக்கும். மேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு சபஹார் துறைமுகம் பயனுள்ளதாக இருக்கும்.
சபஹார் துறைமுகம் செயல்படத் துவங்கும் போது இந்தியாவிலிருந்து ஈரான், ஆப்கானித்தன் மற்றும் நடு ஆசியா நாடுகளுக்கு இரும்புத் தாது, சர்க்கரை மற்றும் அரிசி ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருப்பதுடன், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிச் செலவும் கணிசமாகக் குறையும்.
மத்திய தரைக்கடல்-சூயஸ் கால்வாய் வழித்தடத்தை விட சபஹார் துறைமுகம் வழியாக நடைபெறும் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செலவில் 30% குறையும். மேலும் நடு ஆசியாவிலிருந்து இயற்கை எரிவாயுவை சபஹார் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு குறைந்த செலவில் இறக்குமதி செய்யலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Union minister Sonowal reviews development work at India-operated Chabahar port in Iran". Times of India.
- ↑ "Ports Information - Chabahar". Seas Ark S.A. Archived from the original on 18 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ஈரானின் சபஹார் துறைமுகத்தில் கால்பதித்த இந்தியா
- ↑ ஈரானின் சபஹர் துறைமுகத்திற்கு 2 நடமாடும் எடை தூக்கிகள்: இந்தியா வழங்கியது
உசாத்துணை
தொகு- Chabahar Port (PDF), Port and Maritime Directorate General of Sistan and Balochistan province, 2013, archived from the original (PDF) on 2017-05-17, பார்க்கப்பட்ட நாள் 2022-10-06
- Behuria, Ashok K.; Rizvi, M. Mahtab Alam (13 May 2015), India's Renewed Interest in Chabahar: Need to Stay the Course, New Delhi: IDSA Issue Brief, Institute for Defence Studies and Analyses, archived from the original on 28 பிப்ரவரி 2019, பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2022
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - Bhatnagar, Aryaman; John, Divya (October 2013), Accessing Afghanistan and Central Asia: Importance of Chabahar to India (PDF), Observer Research Foundation
- Cooper, Andrew Scott (2011), The Oil Kings: How the U.S., Iran, and Saudi Arabia Changed the Balance of Power in the Middle East, Simon and Schuster, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4391-5517-2
- Goud, R. Sidda; Mookherjee, Manisha, eds. (2014), India and Iran in Contemporary Relations, Allied Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8424-909-5
- Cheema, Sujata Ashwarya (2014), "India-Iran Relations in the Post-Cold War: A Neo-Realist Analysis", in Goud, R. Sidda; Mookherjee, Manisha (eds.), India and Iran in Contemporary Relations, Allied Publishers, pp. 13–36, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8424-909-5
- George, Anns (2014), "Chabahar Port and India's New Strategic Outpost in Middle East", in Goud, R. Sidda; Mookherjee, Manisha (eds.), India and Iran in Contemporary Relations, Allied Publishers, pp. 87–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8424-909-5
- Padukone, Neil (2014), Beyond South Asia: India's Strategic Evolution and the Reintegration of the Subcontinent, Bloomsbury Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62892-255-4
- Roy, Meena Singh (2012), "Iran: India's Gateway to Central Asia", Strategic Analysis, 36 (6): 957–975, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/09700161.2012.728862