சபா சீனர் சங்கம்
சபா சீனர் சங்கம் (ஆங்கிலம்: Sabah Chinese Association; மலாய்: Persatuan Cina Sabah); சீனம்: 沙巴華人公會) (SCA) என்பது வடக்கு போர்னியோவிலும்; பின்னர் மலேசியாவின் சபா மாநிலத்திலும் செயல்பாட்டில் இருந்த ஓர் அரசியல் கட்சியாகும்.
சபா சீனர் சங்கம் Sabah Chinese Association Persatuan Cina Sabah | |
---|---|
சுருக்கக்குறி | SCA |
நிறுவனர் | கூ சியாக் சிவு (Khoo Siak Chew) பீட்டர் சின் (Peter Chin) |
தொடக்கம் | அக்டோபர் 1962 |
இணைந்தவை | ஐக்கிய கட்சி; ஜனநாயக கட்சி |
தலைமையகம் | கோத்தா கினபாலு, சபா |
தேசியக் கூட்டணி | சபா கூட்டணி (1962-1976) பாரிசான் நேசனல் (1973-1975) |
இந்தக் கட்சி அக்டோபர் 1962-இல், முதன்முதலாக, போர்னியோ உத்தாரா தேசியக் கட்சி (Borneo Utara National Party) எனும் பெயரில் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி மலாயா சீன சங்கத்தின் வழிகாட்டலின் காரணமாக ஐக்கியக் கட்சி (United Party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic Party) ஆகிய கட்சிகளின் இணைப்பாக உருவெடுத்தது.[1][2]
பொது
தொகுஐக்கியக் கட்சி (United Party) மற்றும் மக்களாட்சி கட்சி (Democratic Party) ஆகிய இரண்டு கட்சிகளும் 1962-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டன. சண்டக்கான் நகரில் கூ சியாக் சியூ (Khoo Siak Chew) என்பவர் ஐக்கியக் கட்சியை உருவாக்கினார். மற்றும் ஜெசல்டன் நகரில் பீட்டர் சின் (Peter Chin) என்பவர் மக்களாட்சி கட்சியை உருவாக்கினார்.[2] 1965-இல் சபா சீனர் சங்கம் என பெயர் மாறுவதற்கு முன்பு, சபா தேசியக் கட்சி (Sabah National Party) என பெயரிடப்பட்டது.[1][2][3]
புதிதாக உருவாக்கப்பட்ட சபா சீனர் சங்கம், 1967-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய சபா தேசிய அமைப்பு (United Sabah National Organisation) மற்றும் ஐக்கிய பசோக்மோமோகன் கடசான் அமைப்பு (United Pasokmomogun Kadazan Organisation) ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.[4]
1967 சபா மாநிலத் தேர்தல்
தொகு1967 சபா மாநிலத் தேர்தலில் (1967 Sabah state election) ஐந்து இடங்களையும், 1969 மலேசியப் பொதுத் தேர்தலில் மூன்று இடங்களையும் வென்றது. மேலும் 1974 மலேசியப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலின் ஒரு பகுதியாக இருந்த சபா சீனர் சங்கம், தன்னுடைய மூன்று இடங்களையும் தக்க வைத்துக் கொண்டது.
இருப்பினும், 1976 சபா மாநிலத் தேர்தலில் அது ஓர் இடத்தையும் பெற முடியவில்லை.[5] அது போட்டியிட்ட ஒவ்வோர் இடத்திலும் சபா மக்கள் ஐக்கிய முன்னணியால் (பெர்ஜாயா) தோற்கடிக்கப்பட்டது.[7] இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, சபா சீனர் சங்கம் கலைக்கப்பட்டது.[6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 R.S. Milne & K.J. Ratnam (2014) Malaysia: New States in a New Nation, Routledge, p138
- ↑ 2.0 2.1 Haruhiro Fukui (1985) Political parties of Asia and the Pacific, Greenwood Press, p771
- ↑ Sabah State Archives. "GOVERNMENTAL RECORDS (Before Independence)". Chief Minister Department. http://ww2.sabah.gov.my/ark/collection.html. பார்த்த நாள்: 9 April 2016.
- ↑ Milne & Ratnam, p212
- ↑ Regina Lim (2008) Federal-state Relations in Sabah, Malaysia: The Berjaya Administration, 1976-85, Institute of Southeast Asian Studies, p105
- ↑ Malaysia's Who's who, Volume 1, 2007, p230