சபீனா
சபீனா (Sabina (judge)) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி முதல் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். முன்னதாக இவர் இராசத்தான் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மற்றும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் முன்னாள் நீதிபதியாகவும் இருந்தார்.[1][2][3]
மாண்புமிகு செயல்பாட்டு தலைமை நீதிபதி (ஓய்வு) சபீனா Sabina | |
---|---|
நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 8 அக்டோபர் 2021 – 19 ஏப்ரல் 2023 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
பணியில் தலைமை நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 21 சனவரி 2023 – 19 ஏப்ரல் 2023 | |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
பதவியில் 25 மே 2022 – 22 சூன் 2022 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 11 ஏப்ரல் 2016 – 7 அக்டோபர் 2021 | |
பரிந்துரைப்பு | டி.எசு. தாக்கூர் |
நியமிப்பு | பிரணாப் முகர்ச்சி |
நீதிபதி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 12 மார்ச்சு 2008 – 10 ஏப்ரல் 2016 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருட்டிணன் |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1961 |
நீதிபதி சபீனா 1986 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 21-01-1997 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்ரினார். 2008 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Justice Sabina transferred from Punjab and Haryana HC to Rajasthan HC". Hindustan Times. 7 April 2016. https://www.hindustantimes.com/punjab/justice-sabina-transferred-from-punjab-and-haryana-hc-to-rajasthan-hc/story-mgQvH2Jc6XA1PE5q9ArqUN.html.
- ↑ "Justice Sabina sworn in as Himachal HC judge, Governor administers oath". The Tribune. 9 October 2021. https://www.tribuneindia.com/news/himachal/justice-sabina-sworn-in-as-hc-judge-guv-administers-oath-322185.
- ↑ "Orders of appointment of Smt. Justice Sabina, senior most Judge of the Himachal Pradesh High Court, to perform the duties of the CJ of that High Court w.e.f. 25.05.2022" (PDF). doj.gov.in. 23 May 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.