சப்தகிரி (திருப்பதி)

சப்தகிரி (Sapthagiri) அல்லது திருமலை என்று அழைக்கப்படுவது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள மலை நகரமான திருமலையில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 853 மீ உயரத்தில் உள்ளது மற்றும் சுமார் 10.33 சதுர மைல்கள் (27 km2) பகுதியாகும். இது ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும். இதனால் சேசாசலம் என்று பெயர் பெற்றது. இந்த ஏழு சிகரங்கள் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வருசபாத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலை புகழ்பெற்ற மற்றும் மிகவும் புனிதமான இந்து தெய்வமான வெங்கடாசலபதி கோயிலால் மிகவும் பிரசிதிப்பெற்றது. ஏழாவது சிகரமான வெங்கடாத்ரியில் (வெங்கடாசலம் அல்லது வேங்கடமலை என்றும் அழைக்கப்படுகிறது) கோயில் ஒன்று உள்ளது. மேலும் இது "ஏழு மலைகளின் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளான விஷ்ணுவின் வடிவமான வெங்கடாசலபதி இந்தக் கோயிலின் முதன்மைக் கடவுள் ஆவார். இவர் பாலாஜி, கோவிந்தா மற்றும் ஸ்ரீநிவாசா எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார். [1] இந்த கோவில் ஸ்ரீசுவாமி புட்கரணியின் தென்கரையில் உள்ளது. இது ஒரு புனித நீர் தெப்பமாகும்.

சப்தகிரி
திருமலை, சப்தகிரி சரகம்
உயர்ந்த புள்ளி
உச்சிவெங்கடாத்ரி
ஆள்கூறு13°40′59″N 79°20′49″E / 13.68306°N 79.34694°E / 13.68306; 79.34694
பெயரிடுதல்
சொற்பிறப்புஏழு மலைகள்
தாயகப் பெயர்సప్తగిరి (தெலுங்கு)
புவியியல்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
ஆறுகள்சுவர்ணமுகி
ஊர்திருப்பதி

ஏழு மலைகள்

தொகு

சப்தகிரி என்றும் அழைக்கப்படும் ஏழு மலை சப்த ரிஷியை (ஏழு முனிவர்கள்) குறிக்கின்றன. சில சமயங்களில் சபதகிரி என்று அழைக்கிறார்கள். இதனால் இந்த இறைவனுக்கு சப்தகிரிநிவாசா என்று பெயர். பின்வருபவை ஏழு மலைகள்:

  • விருசபத்திரி - ஸ்ரீநிவாசன் மீது தவம் செய்த அசுர விருசபாவின் பெயரால் அழைக்கப்படும் மலை
  • அஞ்சனாத்திரி - அனுமன் மலை. அனுமனின் தாயார் அஞ்சனாதேவி 12 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
  • நீலாத்திரி - நீலா தேவியின் மலை - பக்தர்கள் காணிக்கையான முடியை நீலா தேவி ஏற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. நீளாதேவிக்கு வேங்கடேச பெருமான் அளித்த வரம்தான் காரணம்.
  • கருடாத்திரி அல்லது கருடாசலம் - கருடன் மலை, விஷ்ணுவின் வாகனம்
  • சேஷாத்திரி அல்லது சேஷாசலம் - சேஷ மலை, விஷ்ணுவின் தசா
  • நாராயணாத்திரி - நாரத முனி மலை
  • வெங்கடாத்ரி - வெங்கடேஸ்வரரின் மலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Tirumala Temple". Archived from the original on 11 October 2007. பார்க்கப்பட்ட நாள் 13 September 2007.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தகிரி_(திருப்பதி)&oldid=3517726" இலிருந்து மீள்விக்கப்பட்டது