சப்தபதி அல்லது சப்தபாதம் (Saptapad-சமசுகிருதம்:|सप्तपदी), இந்து சமயத்தில் திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டிய பின்னர், அக்னியை ஏழு முறை வலம் வரவேண்டும். புரோகிதர் வேத மந்திரங்கள் சொல்ல, ஏழு முறை அக்னியை வலம் வரும் போது, மணமக்கள் அக்னியை சாட்சியாக வைத்து ஏழு உறுதிமொழிகளைச் சொல்ல வேண்டும். அவ்வமயம் அக்னி தேவன் தம்பதியரின் ஒற்றுமைக்கு சாட்சியாகவும், ஆசீர்வாதமாகவும் விளங்குகிறார்.[1] சப்தபதி சடங்கே திருமணத்தை முழுமையாக அங்கீகரிக்கும்.[2]சமசுகிருத மொழியில் சப்த எனில் எழு; பாதம் எனில் அடி ; ஏழு அடிகள் பொருள்..

அக்னியை ஏழு முறை வலம் வந்து சப்தபதி சடங்கு செய்யும் மராத்திய மணமக்கள்
அக்னியை சாட்சியாக வைத்து மணமக்கள் சப்தபதி சடங்கு செய்யும் மணமக்கள்


விளக்கம் தொகு

சப்தபதி என்பது வேத காலத்தில் இருந்து வந்த ஒரு பழமையான சடங்கு . புனிதமான அக்கினி பீடத்தை சுற்றி வருவது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமாக செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும் . சில பகுதிகளில் மணமக்கள் அக்னி குண்டத்தை ஏழு முறை சுற்றி வருகிறார்கள். சிலபகுதிகளில் மணமக்கள் ஒரு முறை சுற்றி வர ஏழு அடிகள் எடுத்து வைக்கிறார்கள் [3] ஒவ்வொரு சுற்றின் போது அக்னியை சாட்சியாக வைத்து தம்பதிகள் ஏழு உறுதிமொழிகள் எடுக்கின்றனர். சப்தபதி சடங்கு பிரதேசத்திற்கு பிரதேசம் சிறிது மாறுபடுகிறது. [4]புனித நெருப்பின் முன்னிலையில் செய்யப்படும் உறுதிமொழிகள் உடைக்க முடியாதவையாகக் கருதப்படுகின்றது. அக்னி தேவன் தம்பதியரின் ஒற்றுமைக்கு சாட்சியாகவும் ஆசீர்வாதமாகவும் விளங்குகிறார்..

ஏழு உறுதிமொழிகள் தொகு

தென்னிந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும் , இந்து திருமணத்தின் போது , மணமகன் சப்தபதியின் ஏழு படிகளை முடிக்கும்போது கீழ்கண்ட எழு உறுதிமொழிகளை அக்னி முன்னிலையில் மணமகளைப் பார்த்துச் சொல்கிறான்.

  • "இப்போது நாம் ஒன்றாக ஒரு உறுதிமொழி ஏற்போம். நாம் அன்பைப் பகிர்ந்து கொள்வோம், ஒரே உணவைப் பகிர்ந்து கொள்வோம், நமது பலத்தைப் பகிர்ந்து கொள்வோம், அதே சுவைகளைப் பகிர்ந்து கொள்வோம், நாம் ஒருமனதாக இருப்போம், ஒன்றாக உறுதிமொழி கடைப்பிடிப்போம். நான் சாமவேதமாக இருப்பேன் , நீ (மணமகள்) ரிக் வேதமாக இருப்பாய்: நான் மேல் உலகமாக இருப்பேன், நீ பூமியாக இருப்பாய்; நான் சுக்கிலம் ஆவேன், நீ அதை உன் கருப்பையில் வைத்திருபாய் - நாம் ஒன்றாக வாழ்ந்து குழந்தைகளையும், பிற செல்வங்களையும் பெறுவோம்; ஓ இனிமையான வார்த்தையுள்ள பெண்ணே! " [5][6][7][8][9]

வட இந்திய திருமணங்களில் மணமகனும், மணமகளும் ஏழு படிகளை முடித்த பின் பின்வரும் உறுதிமொழிகளைக் கூறுவார்கள். " நாங்கள் ஏழு அடி எடுத்து வைத்தோம்; நீங்கள் என்றென்றும் என்னுடையவர்களாகிவிட்டீர்கள்; ஆம், நாங்கள் உறவினர் ஆகிவிட்டோம்; நான் உன்னுடையவன் ஆனேன்;. இனிமேல், நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, நான் இல்லாமல் வாழாதே; மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம், நாம் சொல் மற்றும் பொருள் ஒன்றுபட்டது; நான் ஒலியுடையவன், இரவு நமக்குத் தேனாக இருக்கட்டும், காலை நமக்குத் தேனாக இருக்கட்டும், பூமி நமக்குத் தேனாக இருக்கட்டும், வானங்கள் தேனாக இருக்கட்டும், வானமும் இனிமையாக இருக்கட்டும். தாவரங்கள் நமக்குத் தேனாக இருக்கட்டும், சூரியன் நமக்குத் தேனாக இருக்கட்டும், பசுக்கள் நமக்குத் தேன்-இனிப்புப் பாலைக் கொடுக்கட்டும், வானம் நிலையானது போல, பூமி நிலையானது போல, மலைகள் நிலையாக இருப்பது போல, முழு பிரபஞ்சமும் நிலையானத; எனவே நமது சங்கமம் நிரந்தரமாக நிலைபெறட்டும்.[10][11][12][13]

அக்னியை ஏழு முறை வலம் வருதல் தொகு

தாலி கட்டிய பிறகு மணமக்கள் அக்னியை எழு முறை வலம் போது செய்யும் பிரார்த்தனைகள் பின்வருமாறு:

  1. முதல் சுற்றில் மணமக்கள் ஏராளமான ஊட்டமளிக்கும் மற்றும் தூய்மையான உணவுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
  2. இரண்டாவது சுற்றில் மணமக்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் உடல், ஆன்மீக மற்றும் மன ஆரோக்கியத்தை கடவுளிடம் கேட்கிறார்கள்.
  3. மூன்றாவது சுற்றில் மணமக்கள் செல்வத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள கடவுளிடம் வலிமையைக் கேட்கிறார்கள். மேலும், அவர்கள் செல்வம் பெற ஒன்றாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
  4. நான்காவது சுற்றில் மணமக்கள், ஒருவருக்கொருவர் மற்றும் அந்தந்த குடும்பங்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகரிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
  5. ஐந்தாவது சுற்றில் மணமக்கள் கடவுளிடமிருந்து அழகான, வீரம் மற்றும் உன்னதமான குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
  6. நெருப்பைச் சுற்றி ஆறாவது சுற்றில் , தம்பதியினர் ஒருவருக்கொருவர் அமைதியான நீண்ட ஆயுளைக் கேட்கிறார்கள்.
  7. இறுதி மற்றும் ஏழாவது சுற்றில் மணமக்கள் தங்களுக்கு இடையே தோழமை, ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் புரிதலுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். தங்களை நண்பர்களாக்கி வாழ்நாள் முழுவதும் நட்பை கடைப்பிடிக்கும் பக்குவத்தை தருமாறு கடவுளிடம் வேண்டுகிறார்கள். இப்போது அவர்கள் ஏழு சபதம் செய்த பிறகு நண்பர்களாகிவிட்டதாகவும் , அவர்கள் வாழ்க்கையில் தங்கள் நட்பை முறித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் கணவர் தனது புதிய மனைவியிடம் கூறுகிறார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. www.wisdomlib.org (2017-01-17). "Saptapadi, Saptapadī, Sapta-padi, Saptan-padi: 7 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
  2. ``இந்து முறைப்படி அக்னியை ஏழு முறை சுற்றிவராவிட்டால் திருமணம் செல்லாது!" - அலகாபாத் உயர் நீதிமன்றம்
  3. "Saptapadi or Saat Phere". Best Heritage Wedding Venues in Bangalore - The Tamarind Tree (in அமெரிக்க ஆங்கிலம்). 12 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2023-03-17.
  4. Muesse, Mark W. (in en). The Hindu Traditions: A Concise Introduction. Fortress Press. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4514-1400-4. https://books.google.com/books?id=VlQBfbwk7CwC&dq=saptapadi+ritual&pg=PA106. 
  5. www.panchangam.com
  6. South Indian Wedding, SanathanaDharma.com, பார்க்கப்பட்ட நாள் 2009-05-21, ... The Ritual of the Hindu Wedding too is each symbolic ...
  7. Sapthapathi Manthras - Its meaning, bnaiyer.com, archived from the original on 2008-07-25, பார்க்கப்பட்ட நாள் 2009-05-21, ... they both say: "Now let us make a vow together. We shall share the same food, share the strengths ...
  8. www.sophieanand.com பரணிடப்பட்டது 2007-01-13 at the வந்தவழி இயந்திரம்
  9. A South Indian Wedding – The Rituals and the Rationale: The Vedic Ceremony of the Tamil Shaivite Brahmin community, SAWNET, archived from the original on 2008-05-12, பார்க்கப்பட்ட நாள் 2009-05-21, ... The gates of the wedding hall are adorned with full-grown plantain trees, signifying evergreen plenty for endless generations ...
  10. Diane Warner (2006), Diane Warner's Complete Book of Wedding Vows: Hundreds of Ways to Say "I Do", Career Press, pp. 7–8, ISBN 1-56414-816-5, ... We have taken the Seven Steps. You have become mine ...
  11. Sitaram Sehgal (1969), Hindu marriage and its immortal traditions, Navyug Publications, ... May the plants be honey-sweet for us; may the Sun be all honey for us and ...
  12. Eleanor C. Munro (1996), Wedding readings: centuries of writing and rituals on love and marriage, Penguin Books, ISBN 0-14-008879-2, ... May the nights be honey-sweet for us; may the mornings be honey-sweet ...
  13. Michael Macfarlane (1999), Wedding Vows: Finding the Perfect Words, Sterling Publishing Company, p. 89, ISBN 978-0-8069-0639-3, ... we are word and meaning, united ...

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தபதி&oldid=3857374" இலிருந்து மீள்விக்கப்பட்டது